நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஆடவரை கடித்ததும் பாம்புதான்... இறந்தது பாம்புதான் : அதிசயம் ஆனால் உண்மை

பாலகாட்,
மனிதனைக் கடித்த பாம்பு ஒன்று அடுத்த 5-6 நிமிடங்களில் இறந்திருப்பது அரிதினும் அரிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

இந்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் நடந்தது. அம்மாநிலத்தின் பாலகாட் மாவட்டத்தைச் சேர்ந்த குட்சோடி கிராமத்தில் 25 வயதான  சச்சின் நாக்பூரே என்பவர்அப்பகுதியில் மெக்கானிக்காகப் பணிபுரிந்து வருகிறார். 

இந்த நிலையில், நேற்று காலை 7 மணியளவில் அவர் தனது பண்ணைக்குச் சென்றபோது தற்செயலாக பாம்பு ஒன்றை மிதித்துள்ளார். அப்போது, பாம்பு அவரைக் கடித்துள்ளது. இருப்பினும், அந்த நபரைக் கடித்த 5-6 நிமிடங்களுக்குள், அந்த பாம்பு இறந்துவிட்டது

இந்தச் சம்பவம் அரிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், பாம்பு கடித்த ​​அந்த நபர் ஆபத்தில் இருந்து மீண்டு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கரஞ்சி, வேம்பு உள்ளிட்ட பல்வேறு மரங்களின் கிளைகளைப் பயன்படுத்தி கடந்த 7-8 ஆண்டுகளாக பல் துலக்கி வருவதாக சச்சின் தெரிவித்தார். இந்த மூலிகை மரங்களின் கலவையே பாம்பின் இரத்தத்தை நச்சுத்தன்மையாக்கி, அதன் மரணத்திற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்று அவர் நம்புகிறார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset