
செய்திகள் இந்தியா
ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப தனது வான்வெளியை ஈரான் திறக்கிறது
புதுடெல்லி:
ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப தனது வான்வெளியை ஈரான் திறக்க உள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஈரானிய துணைத் தலைவர் ஜாவத் ஹொசைனி, “இந்தியர்கள் பாதுகாப்பாகத் திரும்புவதற்காக ஈரான் வான்வெளியைத் திறக்கவுள்ளது. இன்றிரவு தொடங்கி மூன்று சிறப்பு விமானங்கள் மூலம் சுமார் 1,000 இந்தியர்களை அழைத்து வர இந்தியாவுடன் ஈரான் ஒத்துழைத்து வருகிறது.
இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளைக் கண்டிக்க வேண்டும். இல்லையெனில் இஸ்ரேல் மற்ற நாடுகளைத் தன்னிச்சையாகத் தாக்கும். இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிரான எஸ்சிஓ (SCO) அறிக்கையில் சேர வேண்டாம் என்ற இந்தியாவின் முடிவை ஈரான் புரிந்துகொள்கிறது. ஆனால், ஈரானின் நிலைப்பாட்டை இந்தியா தாமாக ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கிறது” என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஈரான் அரசாங்க இலக்குகள் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்த இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள "ஆட்சியின் சின்னங்கள்" மீது தாக்குதல்களை தீவிரப்படுத்த ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 4:08 pm
முகத்தில் குத்துவிட்ட எம்எல்ஏ மீது முதல்வர் கூறியபின் போலிசார் வழக்குப் பதிவு
July 12, 2025, 2:10 pm
75 வயதை எட்டியவுடன் மோடி பதவி விலக ஆர்எஸ்எஸ் சூசக அறிவிப்பு
July 11, 2025, 10:02 pm
மாதவிடாய் என்று கூறி ஆடைகளை களைந்து சோதனை: பள்ளி முதல்வர், 4 பேர் கைது
July 11, 2025, 9:51 pm
5 நாடுகளின் பயணத்தை முடித்த மோடி எப்போது மணிப்பூர் செல்வார்: காங்கிரஸ் கேள்வி
July 10, 2025, 8:54 pm
உணவு விடுதியின் ஊழியரின் முகத்தில் குத்துவிட்ட சிவசேனா எம்எல்ஏ
July 10, 2025, 5:12 pm
அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பறக்கும் பிரதமரை இந்தியா வரவேற்கிறது: காங்கிரஸ் விமர்சனம்
July 9, 2025, 9:55 pm
பெண்கள் இட ஒதுக்கீடுக்கு நிதீஷ் புது நிபந்தனை
July 9, 2025, 9:49 pm