
செய்திகள் இந்தியா
"ஆங்கிலம் என்பது வெட்கக்கேடு அல்ல... அதிகாரம்”: அமீத்ஷாவிற்கு ராகுல் காந்தி பதில்
புதுடெல்லி;
ஆங்கிலத்தில் உரையாடுவதை இந்தியர்கள் வெட்கமாக உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை என நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்தார்.
டெல்லியில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய அமித் ஷா, “இந்தியாவில் ஆங்கிலம் அல்லாத சமூகம் உருவாகும் காலம் வெகு தொலைவில் இல்லை. இந்தியாவில் ஆங்கிலத்தில் பேசுபவர்கள் வெட்கப்பட வேண்டும்" என்று பேசியிருந்தார். அமித் ஷாவின் இந்த பேச்சு பல்வேறு தரப்பினரிடையே கண்டனங்களைப் பெற்றது.
இந்நிலையில் இது தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ஆங்கிலம் என்பது அணை அல்ல அது ஒரு பாலம் எனத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், “ஆங்கிலம் என்பது வெட்கக்கேடு அல்ல; அது ஒரு அதிகாரம். ஆங்கிலம் என்பது கை விலங்கல்ல; விலங்குகளை உடைக்கும் கருவி.
இந்தியாவின் ஏழை குழந்தைகள் ஆங்கிலம் கற்பதை பாஜக ஆர்.எஸ்.எஸ் விரும்பவில்லை. ஏழைகள் கேள்வி கேட்பதையோ அல்லது முன்னேறுவதையோ சரி சமமாக மாறுவதையோ அவர்கள் விரும்பவில்லை. இன்றைய உலகில் தாய் மொழியை போலவே ஆங்கிலமும் மிக முக்கியமானது. ஆங்கிலம் வேலை வாய்ப்பை தருவதோடு நம்பிக்கையும் ஊக்குவிப்பது.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழிக்கும் ஆன்மா, கலாச்சாரம், அறிவு போன்றவை இருக்கிறது. அவற்றை நாம் கொண்டாடும் அதே வேளையில் ஆங்கிலத்தையும் கற்றுக் கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும். உலகத்தோடு இந்தியா போட்டி போடுவதற்கு இதுவே வழி. அதுவே ஒவ்வொரு குழந்தைக்கும் சமமான வாய்ப்புகளை வழங்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 4:08 pm
முகத்தில் குத்துவிட்ட எம்எல்ஏ மீது முதல்வர் கூறியபின் போலிசார் வழக்குப் பதிவு
July 12, 2025, 2:10 pm
75 வயதை எட்டியவுடன் மோடி பதவி விலக ஆர்எஸ்எஸ் சூசக அறிவிப்பு
July 11, 2025, 10:02 pm
மாதவிடாய் என்று கூறி ஆடைகளை களைந்து சோதனை: பள்ளி முதல்வர், 4 பேர் கைது
July 11, 2025, 9:51 pm
5 நாடுகளின் பயணத்தை முடித்த மோடி எப்போது மணிப்பூர் செல்வார்: காங்கிரஸ் கேள்வி
July 10, 2025, 8:54 pm
உணவு விடுதியின் ஊழியரின் முகத்தில் குத்துவிட்ட சிவசேனா எம்எல்ஏ
July 10, 2025, 5:12 pm
அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பறக்கும் பிரதமரை இந்தியா வரவேற்கிறது: காங்கிரஸ் விமர்சனம்
July 9, 2025, 9:55 pm
பெண்கள் இட ஒதுக்கீடுக்கு நிதீஷ் புது நிபந்தனை
July 9, 2025, 9:49 pm