
செய்திகள் சிந்தனைகள்
வெற்றி என்பது ... வெள்ளிச் சிந்தனை
4 வயதில் வெற்றி என்பது ஆடையில் சிறுநீர் கழிக்காமல் இருப்பது.
8 வயதில் வெற்றி என்பது வீட்டுக்குச் செல்லும் வழியை அறிவது.
12 வயதில் வெற்றி என்பது நண்பர்களைப் பெறுவது.
18 வயதில் வெற்றி என்பது ஓட்டுநர் உரிமம் பெறுவது.
23 வயதில் வெற்றி என்பது கல்லூரியில் பட்டம் பெறுவது.
25 வயதில் வெற்றி என்பது வேலை கிடைப்பது.
30 வயதில் வெற்றி என்பது குடும்ப வாழ்வைத் தொடங்குவது.
35 வயதில் வெற்றி என்பது பணம் சம்பாதிப்பது.
45 வயதில் வெற்றி என்பது இளமையான தோற்றத்தைப் பராமரிப்பது.
50 வயதில் வெற்றி என்பது குழந்தைகளை வெற்றிகரமாக வளர்ப்பது.
55 வயதில் வெற்றி என்பது குடும்பக் கடமைகளை நிறைவேற்றும் திறன் பெற்றிருப்பது.
60 வயதில் வெற்றி என்பது ஓட்டுநர் உரிமத்தை இன்னும் வைத்திருப்பது.
65 வயதில் வெற்றி என்பது நோயின்றி வாழ்வது.
70 வயதில் வெற்றி என்பது யாருக்கும் ஒரு சுமையாக இல்லாமல் இருப்பது.
75 வயதில் வெற்றி என்பது இன்னும் நண்பர்கள் இருப்பது.
80 வயதில் வெற்றி என்பது வீட்டுக்குச் செல்லும் வழியை அறிவது.
85 வயதில் வெற்றி என்பது ஆடையில் சிறுநீர் கழிக்காமல் இருப்பது.
வாழ்க்கை எவ்வளவு விசித்திரமானது!
அல்லாஹ் கூறுகின்றான்:
“மேலும் நாம் எவருக்கேனும் நீண்ட ஆயுளைக் கொடுத்தால், அவருடைய அமைப்பை அடியோடு மாற்றிவிடுவோம்”. (36:68)
உலக வாழ்க்கை இப்படித்தான் இருக்கும். பேராசை கொள்ளும் அளவுக்கு அதில் எதுவும் இல்லை.
எனவே மறுமை வாழ்வில் கவனம் செலுத்துங்கள்.
ஏனெனில், அதுதான் உண்மையான வெற்றி!
- நூஹ் மஹ்ழரி
தொடர்புடைய செய்திகள்
October 17, 2025, 7:18 am
குதிரைகள் மீது அல்லாஹ் ஏன் சத்தியம் செய்கின்றான்?: வெள்ளிச் சிந்தனை
September 26, 2025, 9:30 am
இறப்புக்கு மட்டுமா இன்னாலில்லாஹி? - பொருள் என்ன? - வெள்ளிச் சிந்தனை
September 19, 2025, 8:06 am
வெளவால் - இறைவனின் அற்புதப் படைப்பு: வெள்ளிச் சிந்தனை
September 12, 2025, 8:32 am
Pillars of Jupiter மூலம் இறைவன் நமக்கு உணர்த்துவது என்ன? - வெள்ளிச் சிந்தனை
September 5, 2025, 7:29 am
நபி (ஸல்) அவர்கள் கூறிய இரண்டு கற்களின் உதாரணம் - வெள்ளிச் சிந்தனை
August 26, 2025, 6:20 pm