நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஈரானிலிருந்து முதல்கட்டமாக 110 இந்திய மாணவர்கள் தில்லி வந்து சேர்ந்தனர் 

தில்லி:

ஈரான் தலைநகா் டெஹ்ரானில் தங்கிப் படித்துவந்த 110 இந்திய மாணவா்கள் புதன்கிழமை இந்தியாவுக்கு  விமானத்தில் புறப்பட்டனா். இவர்கள் அனைவரும் காலை 5.30 மணியளவில் தில்லி விமான நிலையம் வந்தடைந்தனர்.

ஈரானில் இஸ்ரேல் காட்டுமிராண்டித்தனமான  தாக்குதலை முன்னெடுத்துள்ள நிலையில், அந்நாட்டில் இருந்து முதல் கட்டமாக 110 மாணவா்கள் மீட்கப்பட்டுள்ளனா். அவர்களை ஈரான் அரசு பாதுகாப்பாக எல்லை கடந்து போக அனுமந்தித்துள்ளது.

இந்த மோதல் நீடித்தால், மீட்பு நடவடிக்கை வரும் நாள்களில் மேலும் தீவிரமடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ஈரானில் இருந்து  நில எல்லை வழியாக ஆா்மீனியாவுக்கு வந்த மாணவா்கள் அந்நாட்டு தலைநகா் யெரெவானில் இருந்து  புதன்கிழமை விமானம் மூலம் தில்லிக்கு புறப்பட்டனா்.

Operation Sindhu: 110 Indian Students Evacuated From Iran Amid Escalating  Conflict, Parents Express Their Gratitude To Govt (Video)

ஈரானில் உள்ள பிற இந்தியா்களுடன் தூதரகம் தொடா்ந்து தொடா்பில் உள்ளது. அவா்களுக்குத் தேவையான உதவிகள் அளிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset