நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியாவுக்கு எதிராக தொழிலதிபர் சோக்ஸி வழக்கு

லண்டன்: 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,000 கோடிக்கும் அதிகமாக கடன் மோசடி செய்த தொழிலதிபர் மெஹுல் சோக்ஸி இந்தியாவுக்கு எதிராக லண்டன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

அவரை  கடத்தி சித்திரவதை செய்ய முயன்றதாக இந்திய அரசு மற்றும் 5 நபர்கள் மீது அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த இந்திய அதிகாரிகள்,  சோக்ஸிக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்ட உயர்நீதிமன்றத்தில் அனுமதி கோரினர்.

தலைமறைவாக இருந்த சோக்ஸி ஆன்டிகுவாவில் இருந்து பெல்ஜியம் வந்தபோது கடந்த ஏப்ரலில் கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரையும் பெல்ஜியம் மற்றும் பிரிட்டனில் இருந்து நாடுகடத்தும் பணியில் இந்தியா ஈடுபட்டு வருகிறது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset