நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஒரே நாளில் 13 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து

புது டெல்லி: 

அஹமதாபாத் விமான விபத்துக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்ட ஏர் இந்தியா விமான சேவையில் 13 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதற்கு தொழில்நுட்ப கோளாறு காரணமாக கூறப்படுகிறது.

அஹ்மதாபாத்-லண்டன் விமான சேவை உள்பட  7 சர்வதேச விமான சேவைகளை ஏர் இந்தியா நிறுவனம் ஒரேநாளில் ரத்து செய்தது.

அஹ்மதாபாத் - லண்டன், காட்விக் விமான நிலையம் இடையிலான ஏர் இந்தியாவின் விமானம் லண்டன் சென்று, அஹ்மதாபாதுக்கு மீண்டும்  திரும்பியது.

அஹ்மதாபாதில் இருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் லண்டன் புறப்பட இருந்த விமானம் கோளாறு காரணமாக கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

இதேபோன்று, பல்வேறு காரணங்களால் ஏர் இந்தியாவின் தில்லி - பாரீஸ், தில்லி-துபாய், மும்பை-சான் பிரான்சிஸ்கோ, பெங்களூரு-லண்டன், லண்டன்-அமிருதசரஸ், தில்லி - வியன்னா உள்பட 13 சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset