நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஈரானிலிருந்து வெளியேறிய இந்திய மாணவர்கள்

புது டெல்லி:  

ஈரான் - இஸ்ரேல் இடையே தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால்.ஈரானில் மருத்துவம் பயின்று வரும் 1,500 இந்திய மாணவர்கள் ஆர்மீனியா எல்லை வழியாக வெளியேறினர்.

இவர்கள் டெஹ்ரானில் உள்ள இரு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் பயின்று வரும் மாணவர்களாவர்.

இந்தியாவின் கோரிக்கையை ஏற்று சாலை மார்க்க எல்லைகளை ஈரான் அரசு திறந்துள்ளது.

ஆர்மீனியாவிருந்து விமானம் மூலம் அவர்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

முன்னதாக, ஈரான் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஈரானின் வான்வழி மூடப்பட்டிருந்தாலும், பொதுமக்கள் பாதுகாப்பாக நாட்டை விட்டு வெளியேறும் வகையில் அனைத்து தரைவழி எல்லைகளும் திறந்திருக்கும்.

மாணவர்கள் பாதுகாப்பாக செல்லலாம் என்று கூறப்பட்டது. ஈரானில் சுமார் 10 ஆயிரம் இந்தியர்கள் உள்ளதாக கூறப்டுகிறது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset