நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

முதல்வர் சந்திரபாபு நாயுடு ஹெலிகாப்டரில் அடிக்கடி கோளாறு: இது தேவையா என கேள்வி

திருப்பதி: 

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்பட முக்கிய நபர்கள் பயணம் செய்யும் ஹெலிகாப்டரில் அடிக்கடி கோளாறு ஏற்படுவதால் அந்த ஹெலிகாப்டர் தேவையா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் குடும்பத்தினருடன் திருப்பதியில் தரிசனம் செய்துவிட்டு வேறு இடங்களுக்கு ஹெலிகாப்டரில் செல்ல இருந்தார்.

சந்திரபாபு நாயுடு உள்பட முக்கிய நபர்கள் பயணம் செய்யும் ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்பட்டதால், தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு அவர் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.

இதையடுத்து,  அந்த ஹெலிகாப்டர் இனி தேவையா என்பதை அறிய வேண்டும் என டிஜிபி ஹரீஷ்குமார் குப்தாவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஆந்திர முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset