
செய்திகள் சிந்தனைகள்
பேசத் தயங்கும் வலிமிகுந்த இதயங்கள் - வெள்ளிச் சிந்தனை
சூழலும் பின்னணியும்
1. மாணவர் ஒருவர் கூறினார்: எங்கள் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் பெண்கள் அணியும் கைக் கடிகாரத்தை அணிந்திருந்தார்.
"அது விபத்தில் இறந்த அவருடைய மகளின் கைக் கடிகாரம் என்றும், மகள் மீது கொண்ட பாசத்தால் அதைக் கழற்ற மனம் வரவில்லை'' என்றும் அவர் கூறும்வரை, அவரைப் பார்த்து நாங்கள் சிரித்துக் கொண்டிருந்தோம்.
பேசத் தயங்கும் வலி மிகுந்த இதயங்கள் எத்தனையோ உள்ளன.
2. ஒரு பெண்ணைக் குறித்த அவதூறுச் செய்தி ஓர் இளைஞனுக்கு வந்தது. "அது என்ன செய்தி?'' என்று தோழர்கள் விசாரித்தனர்.
அவர் சொன்னார்: "ஓர் அவதூறுச் செய்தியை நீங்கள் கேள்விப்பட்டால் அதை உங்களுடன் தடுத்து நிறுத்துங்கள். வெளியே பரப்பாதீர்கள். அவ்வாறெனில், ஒருவருடைய குறைகளை மறைத்த நன்மை உங்களுக்குக் கிடைக்கும். அல்லாஹ்வும் உங்கள் குறைகளை மறைப்பான்''.
மற்றவர் குறைகள் மறைப்பதற்கானவை. பரப்புவதற்கானவை அல்ல.
3. "பள்ளிவாசலில் வைத்திருக்கும் தண்ணீரை ஏன் குடிக்கிறீர்கள்? வீட்டில் தண்ணீர் இருக்குமே?'' என்று ஒருவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், "நன்மையை நாடி பள்ளிவாசலில் அதை வைத்திருப்பவருக்கு நற்கூலி கிடைக்க வேண்டும் என்பதற்காக குடிக்கிறேன்'' என்றார்.
தூய்மையான ஆன்மாக்கள் தங்களுக்கு விரும்புவதையே பிறருக்கும் விரும்பும்.
4. ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்ட மனைவியுடன் அமர்ந்து சிரித்துப் பேசி, அவளுக்கு உணவு கொடுத்து, அவளை நன்றாகக் கவனித்துக்கொள்கிறார் ஒரு கணவர்.
"அவளுக்குத்தான் நீங்கள் யார் என்று தெரியாதே? பின் ஏன் இப்படிக் கவனிக்கிறீர்கள்?'' என்று அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், "அவளுக்குத்தானே தெரியாது. ஆனால் அவள் என்னுடைய மனைவி என்றும் என் துணைவி என்றும் எனக்கு நன்றாகத் தெரியுமே'' என்றார்.
நாம் நினக்கும் அன்புக்கும் உண்மையான அன்புக்கும் எவ்வளவு வேறுபாடு..?
5. "உங்கள் வீட்டுக்கும் நீங்கள் வேலை செய்யும் இடத்திற்கும் எவ்வளவு தூரம்?'' என்று ஒருவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், "அருகில்தான். வாகனத்தில் சென்றால் 500 தடவை தஸ்பீஹ் சொல்லும் நேரம். நடந்து சென்றால் ஏறக்குறைய 1200 தடவை தஸ்பீஹ் சொல்லும் நேரம்'' என்றார்.
அல்லாஹ்வை நினைவு கூராமல் ஒருகண நேரம் கூட கடந்துவிடக் கூடாது என்பதில் சிலர் கவனமுடன் இருக்கிறார்கள்.
- நூஹ் மஹ்ழரி
தொடர்புடைய செய்திகள்
October 17, 2025, 7:18 am
குதிரைகள் மீது அல்லாஹ் ஏன் சத்தியம் செய்கின்றான்?: வெள்ளிச் சிந்தனை
September 26, 2025, 9:30 am
இறப்புக்கு மட்டுமா இன்னாலில்லாஹி? - பொருள் என்ன? - வெள்ளிச் சிந்தனை
September 19, 2025, 8:06 am
வெளவால் - இறைவனின் அற்புதப் படைப்பு: வெள்ளிச் சிந்தனை
September 12, 2025, 8:32 am
Pillars of Jupiter மூலம் இறைவன் நமக்கு உணர்த்துவது என்ன? - வெள்ளிச் சிந்தனை
September 5, 2025, 7:29 am
நபி (ஸல்) அவர்கள் கூறிய இரண்டு கற்களின் உதாரணம் - வெள்ளிச் சிந்தனை
August 26, 2025, 6:20 pm