செய்திகள் கலைகள்
'கூலி' திரைப்படத்தில் என்னுடைய கதாபாத்திரம் சுவாரஸ்யமாக இருக்கும்': ஆமீர் கான்
மும்பை:
'வேட்டையன்' திரைப்படத்திற்குப் பிறகு ரஜினி நடிப்பில் `கூலி' திரைப்படம் வெளியாக இருக்கிறது.
'லியோ' படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் நாகர்ஜூனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஆகஸ்ட் 14 ஆம் தேதி இத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. 'கூலி' திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் ஆமீர் கான் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன.
தற்போது அமீர்கான் அதனை உறுதி செய்திருக்கிறார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட அமீர்கான்," 'கூலி' திரைப்படத்தில் என் கதாபாத்திரம் சுவாரஸ்யமாக இருக்கும்.
கண்டிப்பாக அனைத்து ரசிகர்களும் ரசிப்பார்கள்" என்று கூறியிருக்கிறார். மேலும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நாயகனாக நடிக்க உள்ளதையும் அமீர் கான் அறிவித்திருக்கிறார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 27, 2026, 12:33 pm
நடிகரும், இயக்குநருமான கே. பாக்யராஜ் காலமானார்
June 24, 2026, 10:20 pm
பத்ம பூஷன் விருது பெற்றார் நடிகர் மம்முட்டி
June 24, 2026, 4:13 pm
ரஜினிகாந்த்தின் தர்மன் திரைப்படத்தில் நடிகை ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார்
June 22, 2026, 12:39 pm
நடிகை ருக்மணி வசந்த் அளித்த புகாரில் 3 பேரை கைது செய்த போலீசார்
June 16, 2026, 5:32 pm
அமீர் கான் மகனைத் தடுத்து நிறுத்திய சல்மான் கான் பாதுகாவலர்
June 14, 2026, 9:20 pm
