நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விற்பனை வரி மறுஆய்வு, சேவை வரி விரிவாக்கம் ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது: அமீர் ஹம்சா

புத்ராஜெயா:

விற்பனை வரி மறுஆய்வு, சேவை வரி விரிவாக்கம் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இரண்டாவது நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் இதனை கூறினார்.

வருவாயை அதிகரிப்பதன் மூலமும் வரி தளத்தை விரிவுபடுத்துவதன் மூலமும் நாட்டின் நிதி நிலையை வலுப்படுத்த இந்த விற்பனை வரி விகிதம், சேவை வரி வரம்பை விரிவுபடுத்தும் மறுஆய்வை அரசாங்கம் செயல்படுத்தும்.

இந்த நடவடிக்கை, மக்கள் மீது அதிக சுமையை ஏற்படுத்தாமல் சமூக பாதுகாப்பு வலையின் தரத்தை மேம்படுத்தும்.

மேலும் மடானி  பொருளாதார கட்டமைப்பின் கீழ் தொடர்ச்சியான சீர்திருத்தங்களுக்கு அரசாங்கம் உறுதி கொண்டுள்ளது.

விற்பனை, சேவை வரி திருத்தத்தால் பெரும்பான்மையான மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யப்பட வேண்டும்.

அதற்கு  அடிப்படை பொருட்கள், சேவைகள் வரி விதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு மடானி அரசாங்கம் ஒரு இலக்கு அணுகுமுறையை எடுத்து வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset