நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நானும் என் கணவரும் எங்கள் சொந்த சேமிப்பிலிருந்து ஹஜ்ஜுக்கு பணம் செலுத்தினோம்: நூருல் இசா

கோலாலம்பூர்:

நானும் என் கணவரும் எங்கள் சொந்த சேமிப்பிலிருந்து ஹஜ்ஜுக்கு பணம் செலுத்தினோம்.

கெஅடிலான் துணைத் தலைவர் நூருல் இசா அன்வார் இன்று தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.

ஒரு முஜமலா விசா மூலம் இந்த ஹஜ் யாத்திரை மேற்கொண்டோம்.

அவதூறு தொடர்பான பல பதிவுகள், செய்திகள் எனக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இது எதுவும் உண்மையல்ல. உண்மையிலிருந்து வெகு தொலைவில் பரவினால். அதை சரிசெய்ய வேண்டும்.

கடவுளுக்கு நன்றி. நானும் என் கணவரும் ஒரு முஜமலா விசா மூலம் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

தங்குமிடம், போக்குவரத்து உள்ளிட்ட தளவாடங்கள், உரிமம் பெற்ற பயண நிறுவனமான மிம் டிராவல்ஸால் ஏற்பாடு செய்யப்பட்டது. 

எங்களின் சேமிப்பை பயன்படுத்தி வணிக விமானம் வாயிலாக பயணத்தை மேற்கொண்டோம்.

அவதூறு கூறுவது போல் தனியார் ஜெட் விமானங்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. 

மில்லியன் கணக்கான பிற யாத்ரீகர்களைப் போலவே நாங்கள் பயணமும் மேற்கொண்டோம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset