நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய மாணவர்கள் ஹார்வர்டில் தங்கள் படிப்பை இடையூறு இல்லாமல் தொடரலாம்: உயர் கல்வியமைச்சு

புத்ராஜெயா:

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மலேசிய மாணவர்கள் தங்கள் விசா நிலைக்கு எந்த இடையூறும் இல்லாமல் தற்போதைக்கு தங்கள் படிப்பைத் தொடரலாம்.

உயர்கல்வி அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை தெரிவித்தது.

ஹார்வர்ட் பல்கலைக்கழகம் தாக்கல் செய்த தற்காலிக தடை உத்தரவை நிலை நிறுத்த முடிவு செய்த அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றத்தின் சமீபத்திய முன்னேற்றத்தைத் தொடர்ந்து இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் பல்கலைக்கழகத்தில் 6,800க்கும் மேற்பட்ட அனைத்துலக மாணவர்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளது.

கல்வியமைச்சு, மலேசியா வாஷிங்டன் டி.சி. அலுவலகம் மூலம் இந்தப் பிரச்சினையின் வளர்ச்சியை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

இந்த முடிவு மலேசிய மாணவர்கள் உட்பட சர்வதேச மாணவர்கள், தற்போதைக்கு தங்கள் விசா நிலைக்கு எந்த இடையூறும் இல்லாமல் தங்கள் படிப்பைத் தொடர அனுமதிக்கிறது என்று உயர் கல்வியமைச்சு கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset