
செய்திகள் கலைகள்
மலேசியாவில் விஜய்யின் ஜனநாயகன் திரைப்பட விற்பனை: புதிய சாதனை
சென்னை:
மலேசியாவில் கோடிக் கணக்கான தொகைக்கு ஜனநாயகம் திரைப்படம் விற்பனை ஆகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ஜனநாயகன்.
இது விஜய்யின் கடைசி படமாகும். அரசியலில் முழுமையாக கவனம் செலுத்தவேண்டும் என்பதற்காக தனது சினிமாவிலிருந்து விலக முடிவு செய்துள்ளார்.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, கவுதம் மேனன், பாபி தியோல், நரேன் என பலரும் நடித்துள்ளனர்.
மேலும் ஸ்ருதி ஹாசன் இப்படத்தில் சிறப்பு பாத்திரத்தில் வருவதாகவும் சொல்லப்படுகிறது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ஜனநாயகன் வெளிவரும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர்.
ரிலீஸுக்கு முன் ப்ரீ பிசினஸில் ஜனநாயகன் திரைப்படம் பட்டையை கிளப்பி வருகிறது. ஓடிடி, சாட்டிலைட் உரிமைகள் மாபெரும் தொகைக்கு விற்பனை ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஜனநாயகம் திரைப்படத்தின் மலேசியா திரையரங்க உரிமை ரூ. 12 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இது தமிழ் சினிமாவில் மிகப் பெரிய என கூறப்படுகிறது. இதன் மூலம் புதிய சாதனையை விஜய் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 20, 2025, 12:36 pm
நடிகர் சூர்யாவின் 45ஆவது படத்திற்குக் கருப்பு என்று பெயரிடப்பட்டுள்ளது
June 18, 2025, 6:36 pm
இயக்குநர் விஜய் கணேஷ் இயக்கத்தில் மிருகசீரிசம்: நாளை ஜூன் 19ஆம் தேதி வெளியாகிறது
June 18, 2025, 12:40 pm
நடிகர் ஆர்யாவுக்குச் சொந்தமான உணவகங்களில் வருமான வரித்துறை சோதனை
June 18, 2025, 11:55 am
கீர்த்தி சுரேஷ் நடித்த படம் தியேட்டருக்கு வருவதில் சிக்கல்
June 18, 2025, 11:48 am
வைரலாகும் நாகர்ஜூனா மகன் திருமணத்தின் உணவு மெனு
June 12, 2025, 4:15 pm
தளபதி விஜய்யின் ஜன நாயகன் படத்தின் கிளிம்ப்ஸ் ஜூன் 22ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்ப்பு
June 11, 2025, 4:36 pm
'கூலி' திரைப்படத்தில் என்னுடைய கதாபாத்திரம் சுவாரஸ்யமாக இருக்கும்': ஆமீர் கான்
June 11, 2025, 3:22 pm
நடிகர் சூர்யாவின் SURIYA 46 படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கியது
June 9, 2025, 5:23 pm