செய்திகள் கலைகள்
ஷரிபா ஜூரியாவின் மறைவு நாட்டின் கலைத் துறைக்கு பெரும் இழப்பு: பிரதமர்
கோலாலம்பூர்:
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் தனது மனைவி டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலும் நாட்டின் புகழ்பெற்ற காட்சி கலைஞரான ஷரிபா ஜூரியா அல்-ஜெஃப்ரி அவர்கள் நேற்று மறைந்ததையடுத்து, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
மறைந்த அவர் கொள்கை நெறிகளும், உயர்ந்த மனப்பான்மையும் கொண்ட ஒரு சிறந்த கலைஞர் என்பதால், அவரது மறைவு நாட்டின் கலை உலகிற்கு ஒரு பெரும் இழப்பாகும் என்று அன்வார் கூறினார்.
அவரது சேவைகள் நிர்வாகப் பணிகளின் மூலம் மட்டுமல்லாமல், மனிதநேயம், நீதியை மையமாகக் கொண்ட அவரது கலைப் படைப்புகள் மூலமும் வெளிப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
“‘WITHER COMPASSION? WITHER JUSTICE? WITHER PEACE?’ என்ற ஓவியங்கள் எனக்கு மிகவும் நெருக்கமான படைப்புகளில் ஒன்று. அது 1998 ஆம் ஆண்டு எனது பதவி நீக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது,” என்று அன்வார் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மறைந்த ஷரிபா ஜூரியா, தேசிய காட்சி கலை மேம்பாட்டு வாரியத்தின் இயக்குநர்கள் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றி, நாட்டின் காட்சி கலைத் துறையின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 11:52 am
ஓணம் ஓட்டத்தில் பிருத்விராஜின் கலிஃபாவை முந்திய நிவின் பாலியின் பெத்லகேம்
August 22, 2026, 4:18 pm
‘மோசமான’ திரைப் படத்துக்கு மாபெரும் வரவேற்பு
August 21, 2026, 5:34 pm
தமிழ்ச்சினிமாவின் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல்நலக்குறைவால் காலமானார்
August 19, 2026, 3:00 pm
நடிகர் விஷால் இயக்கி நடித்துள்ள மகுடம் திரைப்படத்தின் மோசமான வசூல்: ரசிகர்கள் ஏமாற்றம்
August 19, 2026, 2:38 pm
நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தின் முதல் சிங்கிள்: ஆகஸ்ட் 21ஆம் தேதி வெளியாகிறது
August 18, 2026, 12:49 pm
நடிகை அனன்யா ராஜ் காலமானார்
August 17, 2026, 7:24 pm
ஜன நாயகன் திரைப்படம் ஓடிடி தளத்தில் வரும் ஆக. 21 ஆம் தேதி வெளியாகிறது
August 17, 2026, 12:20 pm
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் 2 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் வேட்டை
August 13, 2026, 5:40 pm
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஆகும்: சூர்யா நம்பிக்கை
August 13, 2026, 11:42 am
