செய்திகள் தமிழ் தொடர்புகள்
இணைய சூதாட்டத்தில் பணத்தை இழந்த டாக்டர் டிரிப்சில் விஷமருந்து செலுத்தி தற்கொலை செய்ய முயற்சி
கொடைக்கானல்:
கொடைக்கானலில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த டாக்டர் காருக்குள் அமர்ந்தபடி டிரிப்ஸில் விஷமருந்து செலுத்தி கொண்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர், வசந்தா நகரை சேர்ந்த ஜெயராஜ் – ஆசிரியை பெஸ்கிலால் தம்பதியின் மகன் ஜோஸ்வா சாமுராஜ் (29). டாக்டர். திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி கொண்டே கொண்டு சேலம் தனியார் மருத்துவக்கல்லூரியில் மயக்கவியல் பாடப்பிரிவில் மேற்படிப்பு படித்து வந்தார்.
இவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையாகி ரூ.7 லட்சம் வரை இழந்துள்ளதாகவும், இந்த பணத்தை படிப்புக்கு எனக்கூறி வீட்டிலிருந்து வாங்கியதாகவும், இதையறிந்து பெற்றோர், உறவினர்கள் அவரை தட்டி கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஜோஸ்வா சாமுராஜ், கடந்த ஜூன் 2ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமானார். இதுகுறித்த புகாரில் வேடசந்தூர் போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் கொடைக்கானல் பூம்பாறை மலைக்கிராமத்திற்கு செல்லும் சாலையில் கார் ஒன்று கடந்த சில நாட்களாக நின்றிருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் நேற்று கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது காரில் வாலிபர் ஒருவர் தனக்கு தானே டிரிப்ஸ் மூலம் விஷ மருந்தினை செலுத்தி கொண்ட நிலையில் இறந்து கிடந்ததும், விசாரணையில் அவர் மாயமான ஜோஸ்வா சாமுராஜ் என்பதும் தெரியவந்தது.
பின்னர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்ததால் டாக்டர் டிரிப் மூலம் மருந்தை செலுத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 10, 2025, 4:39 pm
SIRக்கு எதிராக சென்னையில் ‘இந்தியா’ கூட்டணி கட்சியினர் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்: செல்வப் பெருந்தகை அறிவிப்பு
November 9, 2025, 3:47 pm
சீமானின் பிறந்தநாளையொட்டி, சென்னையில் உள்ள அவரது வீட்டில் 3 ஆயிரம் பேருக்கு விருந்து
November 8, 2025, 9:14 pm
3,665 காவலர் பணியிடங்களுக்கு 2.25 லட்சம் இளைஞர்கள் தயாராகி வருகின்றனர்
November 8, 2025, 5:23 pm
பெண்களுக்கான பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் பறிமுதல் செய்யப்படும்: சென்னை ஆட்சியர் எச்சரிக்கை
November 5, 2025, 5:08 pm
