செய்திகள் தமிழ் தொடர்புகள்
தென் தமிழக கடலோரப் பகுதிகள் இன்று சூறாவளிக் காற்று வீசக்கூடும்; தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
சென்னை:
தமிழகத்தில் இன்று முதல் ஆகஸ்ட்.3-ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது.
இதன் காரணமாக, இன்று (ஜூலை 29) தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் வீசக் கூடும். 30, 31 தேதிகளில் ஓரிரு இடங்களிலும், ஆகஸ்ட்டு 1, 2, 3 ஆகிய தேதிகளில் ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் ஆகிய பகுதிகளில் இன்று சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 13, 2026, 12:09 pm
சென்னையில் இருந்து 238 பேருடன் அபுதாபிக்கு புறப்பட்ட விமானத்தில் கோளாறு
May 12, 2026, 11:02 am
தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு
May 10, 2026, 1:11 pm
