
செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழக அரசின் தமிழ் சிறப்பு விருதுகள்: படைப்பாளர்கள் ஆக.22 வரை விண்ணப்பிக்கலாம்
சென்னை:
தமிழக அரசின் தேவநேய பாவாணர் விருது, வீரமாமுனிவர் விருது உள்ளிட்ட விருதுகளுக்கு தமிழ் அறிஞர்கள் ஆகஸ்ட் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்குநரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்: தமிழ் மொழியின் மேம்பாட்டுக்கு பாடுபடும் தமிழ் அறிஞர்கள், படைப்பாளர்களுக்கு தமிழக அரசு பல்வேறு விருதுகள், பரிசுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான தேவநேய பாவாணர் விருது (ரூ.2 லட்சம் & ஒரு பவுன் தங்க பதக்கம்), வீர மாமுனிவர் விருது (ரூ.2 லட்சம் & ஒரு பவுன் தங்க பதக்கம்), தூய தமிழ் ஊடக விருது (ரூ.50 ஆயிரம் & ரூ.25 ஆயிரம் மதிப்பு தங்க பதக்கம்), நற்றமிழ் பாவலர் விருது (ரூ.50 ஆயிரம் & ரூ.25 ஆயிரம் மதிப்பு தங்க பதக்கம்), தூய தமிழ் பற்றாளர் விருது (ரூ.20 ஆயிரம்) ஆகிய விருதுகளுக்கும், தூய தமிழ் பற்றாளர் பரிசுக்கும் (ரூ.5 ஆயிரம் பரிசு) தமிழ் அறிஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பத்தை என்ற இணையதளத்தில் http://sorkuvai.tn.gov.inவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை ‘இயக்குநர், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்குநரகம், நகர நிர்வாக அலுவலக கட்டிடம் (முதல் தளம்), 75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்ஆர்சி நகர், சென்னை-600023’ என்ற முகவரியில் நேரிலோ, அஞ்சல் வழியாகவோ அல்லது http://awards.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவோ ஆகஸ்ட் 22-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்கள் அறிய 044-29520509 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 27, 2025, 8:43 am
பிரதமர் மோடி தமிழக வருகை: பாதுகாப்புக் காரணங்களுக்காக திருச்சியில் கடைகளை அடைக்க கெடுபிடி
July 26, 2025, 2:35 pm
ஆர்டிபி கல்வி நிறுவனம் & அறக்கட்டளையின் வெள்ளிவிழா
July 25, 2025, 8:09 pm
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது: பாம்பனில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றம்
July 25, 2025, 4:51 pm
வைகோ உட்பட 6 தமிழக எம்பிக்கள் ஓய்வு
July 23, 2025, 7:59 am