நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திரசோழன் நினைவு நாணயத்தை இந்தியப் பிரதமர் மோடி வெளியிட்டார்

தஞ்சாவூர்:

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் நேற்று நடந்த ஆடி திருவாதிரை விழாவில் ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். 

கோயிலில் கங்கை நீரால் அபிஷேகம் செய்து சிறப்பு தரிசனம் செய்து வழிபட்டார். பிரதமர் மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்தார். 

மாலத்தீவில் இருந்து ராணுவ விமானம் மூலம் நேற்றுமுன்தினம் இரவு தூத்துக்குடி வந்த பிரதமர் மோடி, வாகைகுளம் பகுதியில் ரூ.452 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்ததுடன், ரூ.4,900 கோடி திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்.

பின்னர் இரவு 10 மணியளவில் தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் இரவு தங்கிய பிரதமர் மோடி பின்னர் கார் மூலம் காலை 11.10 மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்கு புறப்பட்டார். 11.55 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து கங்கைகொண்ட சோழபுரத்துக்கு ஹெலிகாப்டரில் மோடி சென்றார். 

முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் கோயிலுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு, பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

பின்னர் வாரணாசியில் இருந்து கொண்டுவரப்பட்ட கங்கை நீரை கொண்டு பிரகதீஸ்வரருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். பின்னர், கோயிலில் அமர்ந்து தியானம் செய்தார். கோயில் சிற்பங்களையும், தொல்லியல் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியையும் பார்வையிட்டார்.

தொடர்ந்து கோயில் வளாகத்தில் குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பந்தலில் நடைபெற்ற முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம், கங்கைகொண்ட சோழபுரம் கோயில் கட்டுமான தொடக்கம், தென்கிழக்கு ஆசியாவில் கடல்சார் பயணத்தின் 1000 ஆண்டுகள் நினைவை கொண்டாடும் ஆடி திருவாதிரை விழா ஆகிய முப்பெரும் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset