
செய்திகள் தமிழ் தொடர்புகள்
ஆர்டிபி கல்வி நிறுவனம் & அறக்கட்டளையின் வெள்ளிவிழா
பாபநாசம்:
ஆர்டிபி கல்வி குழுமத்தின் வெள்ளிவிழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி செழியன், பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்கள்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொஹிதீன் தலைமையில் நடைபெற்ற விழாவில் உழைத்தேன், உயர்ந்தேன், உயர்த்துகிறேன் எனும் தலைப்பில் ஆர்டிபி கல்வி குழுமத்தின் தலைவர் டாக்டர் தாவுத் பாட்சா அவர்களின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் முனைவர் ஜவாஹிருல்லா வெளியிட பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பெற்றுக்கொண்டார்.
இதில் தமிழக வக்பு வாரியத் தலைவரும் இராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான நவாஸ் கனி, மயிலாடுதுறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சுதா ராமகிருஷ்ணன், நாகப்பட்டினம் தொகுதி சட்டமன்ற ஊறுப்பினர் ஆளூர் ஷா நவாஸ், கும்பகோணம் தொகுதி எம். எல் ஏ அன்பழகன், பேராசிரியர் முனைவர் ஜவாஹிருல்லா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துர் ரஹ்மான், மலேசியாவைச் சேர்ந்த மனிதவள அமைச்சின் ஹெச் ஆர் டி கோர்ப்பின் முன்னாள் இயக்குனர் டத்தோ வீரா ஷாகுல் தாவூத் ஆகியோர் உட்பட முக்கிய பிரமுகர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
July 27, 2025, 8:43 am
பிரதமர் மோடி தமிழக வருகை: பாதுகாப்புக் காரணங்களுக்காக திருச்சியில் கடைகளை அடைக்க கெடுபிடி
July 25, 2025, 8:09 pm
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது: பாம்பனில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றம்
July 25, 2025, 4:51 pm
வைகோ உட்பட 6 தமிழக எம்பிக்கள் ஓய்வு
July 24, 2025, 9:08 am
தமிழக அரசின் தமிழ் சிறப்பு விருதுகள்: படைப்பாளர்கள் ஆக.22 வரை விண்ணப்பிக்கலாம்
July 23, 2025, 7:59 am