நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது: பாம்பனில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றம்

ராமேசுவரம்: 

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வெள்ளிக்கிழமை பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, மேற்கு - வடமேற்கு திசையில், மேற்கு வங்கம் - வடக்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இதன் காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களிலும், கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது, என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தென்தமிழக கடலோரப்பகுதிகள், பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா, குமரிக்கடல் ஆகிய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதற்கு மீன்வளத்துறையினர் தடை விதித்துள்ளனர். 

மேலும், இதனை தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset