நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மறுசீரமைப்புக்காக ஜாலான் ராஜா சாலையின் ஒரு பகுதி தற்காலிகமாக மூடப்படும்: டிபிகேல்

பெட்டாலிங் ஜெயா: 

பொது இடங்களில் மேற்கொள்ளப்படவுள்ள மறுசீரமைப்பு பணிகளுக்காக ஜாலான் ராஜா சாலையின் ஒரு பகுதி தற்காலிகமாக மூடப்படும் என்று கோலாலம்பூர் நகராட்சி மன்றம்ச்  டிபிகேஎல்  தெரிவித்துள்ளது.

பொது மக்கள் நடந்தும் செல்லும் பகுதிகளிலும் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று டிபிகேஎல் கூறியது. 

இது அவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படுவதாகவும் டிபிகேஎல்  குறிப்பிட்டது. 

ஜாலான் துன் பேராக் சந்திப்பிலிருந்து ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான் சந்திப்பு வரை சுல்தான் அப்துல் சமத் கட்டிடத்திற்கு முன்னால் உள்ள சாலை செல்பவர்கள் சிரமத்தை எதிர்நோக்க கூடும் என்று  டிபிகேஎல்  அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான் மற்றும் ஜாலான் துன் பேராக் ஆகிய இடங்களிலிருந்து வரும் வாகனங்கள் ஜாலான் ராஜாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படாது.

இருப்பினும்ஜாலான் ராஜாவிலிருந்து வரும் வாகனங்கள் ஜாலான் துன் பேராக்கின் வலது புறம் திரும்ப அனுமதிக்கப்படும்.

GO-KL, RapidKL மற்றும் Hop On-Hop Off  பொது பேருந்து சேவைகளில் தற்காலிக மாற்றங்கள் ஏற்படும் என்று டிபிகேஎல்  தெரிவித்துள்ளது.

- அஸ்வினி செந்தாமரை
 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset