செய்திகள் தமிழ் தொடர்புகள்
திருச்செந்தூர் முருகன் கோயிலில் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டம்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் முருகன் கோயிலில் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
திருச்செந்தூர் முருகன் கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், திருத்தணி முருகன் கோயில், ஆனைமலை மாசாணியம்மன் கோயில், பண்ணாரி மாரியம்மன் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், மருதமலை முருகன் கோயில் மற்றும் பெரியபாளையம் பவானியம்மன் கோயில் ஆகிய 10 கோயில்களில் ஆண்டுக்கு ரூ.50 லட்சம் செலவில் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு தினசரி காய்ச்சிய பால் வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்.
இதையடுத்து திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டத்தை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்து கோயில் பொது தரிசனப்பாதையில் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பாலை வழங்கினார்.
இதேபோல திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டத்தை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி நேற்று தொடங்கி வைத்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 27, 2026, 2:29 pm
இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்
June 26, 2026, 4:12 pm
தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டரை ரத்து செய்தது தமிழ்நாடு அரசு
June 25, 2026, 2:17 pm
அரசுப் பேருந்தில் பெரம்பூருக்கு பயணித்த முதல்வர் விஜய்
June 24, 2026, 11:18 am
வேளாண் அமைச்சரின் சொந்தத் தொகுதியில் ஆயிரக்கணக்கான நெல் முட்டைகள் மழையில் நனைந்து நாசம்
June 23, 2026, 10:20 pm
நெல்லை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ஜூன் 28-இல் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
June 23, 2026, 1:23 pm
1990 முதல் மக்கள் பணி செய்து வருகிறேன்: சட்டசபையில் விஜய் பேச்சு
June 22, 2026, 11:09 am
