
செய்திகள் விளையாட்டு
புற்றுநோயால் உயிரிழந்த பயிற்சியாளரின் மகள்: பிஎஸ்ஜி ரசிகர்கள் சிறப்பு அஞ்சலி
பாரிஸ்:
பிஎஸ்ஜி அணி பயிற்சியாளரின் மகளுக்காக அந்த அணியின் ரசிகர்கள் மிகப் பெரிய போஸ்டரை அஞ்சலியாக செலுத்தியது உலக கால்பந்து ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெயினைச் சேர்ந்த லூயிஸ் ஹென்ரிக்கின் மகள் ஸனா தனது 9ஆவது வயதில் புற்றுநோயால் உயிரிழந்தார்.
அந்தக் குழந்தை உயிருடன் இருக்கும் போது 2015இல் பார்சிலோனா அணி லூயிஸ் ஹென்ரிக் தலைமையில் சாம்பியன்ஸ் லீக்கை வென்றது.
அந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்ற ஸனா பார்சிலோனா கொடியை தந்தையுடன் சேர்ந்து நடும் புகைப்படங்கள் வைரலாகியது.
இந்நிலையில் பிஎஸ்ஜி ரசிகர்கள் அதேமாதிரி ஸ்னா தனது தந்தை லூயிஸ் ஹென்ரிக் உடன் பிஎஸ்ஜி கொடியை நடுவது போல் போஸ்டரை அடித்து திடலுக்குக் கொண்டு வந்திருந்தார்கள்.
ரசிகர்களின் கணிப்பு படியே பிஎஸ்ஜி 5-0 என அபார வெற்றி பெற்று முதல்முறையாக சாம்பியன் லீக் கிண்ணத்தை வென்றது.
திடலில் தனது மகளின் போஸ்டரைப் பார்த்ததும் லூயிஸ் ஹென்ரிக் கண்ணீர் மல்க புன்னகைத்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 3, 2025, 9:20 am
அட்லாட்டிகோ மாட்ரிட் அணியுடனான தனது ஒப்பந்தத்தை கிரிஸ்மேன் நீட்டித்துள்ளார்
June 3, 2025, 8:58 am
நண்பருடன் இணைந்து கால்பந்து கிளப்பை தொடங்கிய மெஸ்சி
June 2, 2025, 9:07 pm
பேராக் இந்திய பூப்பந்து மன்றத்தால் பல தேசிய விளையாட்டாளர்கள் உருவாகி வருகின்றனர்
June 2, 2025, 10:39 am