நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சாம்பியன் லீக் இறுதிப் போட்டியில் வெற்றி பெற இந்தர்மிலான் இறுதி வரை போராடும்

ரோம்:

ஐரோப்பிய சாம்பியன் லீக் இறுதிப் போட்டியில் வெற்றி பெற இந்தர்மிலான் இறுதி வரை போராடும்.

அதன் முன்னணி ஆட்டக்காரர் லாவ்தாரோ மார்டின்ஸ் இதனை கூறினார்.

லாவ்தாரோ மார்டின்ஸ் தனது வாழ்க்கையில் உலகக் கிண்ணம் உட்பட பல கிண்ணங்களை வென்றுள்ளார். 

ஆனால், அவர் ஒருபோதும் சாம்பியன் லீக் கிண்ணத்தை  வென்றதில்லை.

இந்நிலையில் இந்தர்மிலான், பிஎஸ்ஜி அணிகளுக்கு இடையிலான சாம்பியன் லீக் இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

வெள்ளிக்கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் மார்டின்ஸ், 

சாம்பியன்  லீக்கை வெல்ல அணி அனைத்தையும் கொடுக்கும். இந்தர்மிலான் ஒரு அணியாக மேம்பட்டுள்ளது.

கேப்டனாக இருப்பது எனக்கு அதிக பொறுப்பை அளிக்கிறது.

ஆனால், ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு இறுதிப் போட்டி போல இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் கூறுவேன். 

ஒரு அணியாக மட்டுமே நாம் கிண்ணத்தை வெல்ல முடியும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset