நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுகாதார இயக்குநர் பதவிக்கு மருத்துவர் ஹரி கிருஷ்ணாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது 

கோலாலம்பூர்:

சுகாதார இயக்குநர் பதவிக்கு மருத்துவர் ஹரி கிருஷ்ணா உட்பட நான்கு மூத்த மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய சுகாதார இயக்குநர் டத்தோ டாக்டர் ரட்ஸி அபு ஹாசன் கட்டாயப் பணி ஓய்வு வயதை எட்டியுள்ள நிலையில்,  இந்தப் பதவி காலியாக உள்ளது.

ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறைக்கான துணை சுகாதார இயக்குநர் Datuk Dr Nor Fariza Ngah, மருத்துவத் துறையின் துணை சுகாதார இயக்குநர் Datuk Dr Nor Azimi Yunus ஆகியோரின் பெயர்கள் தற்போது சுகாதார இயக்குநர் பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. 

அதுமட்டுமல்லாமல், சுகாதார அமைச்சின் இருதய அறுவை சிகிச்சைத் தலைவர் Datuk Dr Basheer Ahamed Abdul Kareem, கோலாலம்பூர் மருத்துவமனை இயக்குநர் r, Dr R Harikrishna Nair ஆகிய இருவரும் இந்தப் பரிந்துரை பட்டியலில் இணைந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் பணி ஓய்வு பெற இன்னும் சுமார் ஐந்து ஆண்டுகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். 

பரிந்துரைக்கப்பட்ட நால்வரும் மூத்த தலைமைப் பதவிகளை வகித்துள்ளனர்.

பொது சுகாதாரத் துறைக்கு அவர்கள் அதிகப் பங்களிப்புகளை வழங்கியுள்ளனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset