நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியர்கள் அதிகம் மளிகைப் பொருட்களுக்கு அதிகமாகச் செலவிடுகிறார்கள்:  அமெரிக்க விவசாயத் துறை

கோலாலம்பூர்: 

தென்கிழக்காசியாவிலேயே மலேசியர்கள் தான் மளிகைப் பொருட்களுக்கு அதிகமாகச் செலவிடுவது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

2023-ஆம் ஆண்டில் வீட்டு உணவுக்கான பயனீட்டுச் செலவு மலேசியாவில்தான் மிக அதிகமாக இருந்துள்ளது.

ஒரு நபர் ஆண்டுக்கு 1,940 டாலர் அதாவது 8,848 ரிங்கிட் செலவிடுவதாக USDA எனப்படும் அமெரிக்க விவசாயத் துறையின் பொருளாதார ஆராய்ச்சி சேவையின் தரவு காட்டுகிறது.

மலேசியர்களுக்கு அடுத்து சிங்கப்பூர் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. அதனை தொடர்ந்து, தாய்லாந்து மூன்றாவது இடத்திலும் உள்ளது. 

மலேசியர்கள் வீட்டில் உணவுக்காக அதிக அளவு செலவிடுவதற்கு பல காரணங்கள் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உணவு இறக்குமதியை நம்பியிருத்தல், ரிங்கிட் நாணய மதிப்பிழப்பு மற்றும் தொழிலாளர் பற்றாக்குறை ஆகியவை இதற்கு முதன்மை காரணமாக உள்ளன. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset