நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பார்வையற்ற முதியவருக்கு உதவிய ஆடவரின் காணொலி சமூக ஊடகத்தில் வைரல் 

கோலாலம்பூர்: 

கெடா பெண்டாங்கில் சாலையின் நடுவே நடந்து சென்று கொண்டிருந்த  பார்வையற்ற முதியவருக்கு உதவிய ஆடவரின் காணொலி சமூக ஊடகத்தில் வைரலானது. 

 Zus Garage Pendang என்ற டிக் டாக் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள காணொலியில் கண் பார்வையற்ற ஆடவர் சாலையில் கைத்தடியுடன் தடுமாற்றத்தோடு நடந்து செல்வதைக் காண முடிந்தது. 

அம்முதியர் தன் தோலில் ஒரு பையையும் மாற்றிக் கொண்டிருதார். 

அப்போது அச்சாலையில் பயணம் செய்த ஆடவர் தனது வாகனத்தை நிறுத்தி முதியவருக்கு உதவ முன் வந்தார். அதே சமயம் இன்னொரு ஆடவரும் அங்கு விரைந்தார். 

பின் இருவரும் இணைந்து அம்முதியவருக்கு உதவினர். 

இந்தக் காணொலி சமூக ஊடகங்களில் பொது மக்களின் பாராட்டைப் பெற்றது. 

யாரென்று தெரியாத ஒருவருக்கு உடனே உதவி செய்யும் மனப்பான்மை போற்றத்தற்குரியது என்று பொது மக்கள் கருத்துப் பதிவிட்டுள்ளனர். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset