
செய்திகள் மலேசியா
‘Tuan Ziyad: Forbidden Love’ உட்பட 7 நூல்களை உள்துறை அமைச்சகம் தடை செய்துள்ளது
கோலாலம்பூர்:
பொது அமைதியையும் ஒழுங்கையும் அச்சுறுத்தும் வகையில் எழுதப்பட்ட ‘Tuan Ziyad: Forbidden Love’, ‘Kougar 2’ உள்ளிட்ட ஏழு நூல்களை உள்துறை அமைச்சகம் தடை செய்துள்ளது
1984-ஆம் ஆண்டு அச்சு ஊடகங்கள் மற்றும் வெளியீட்டுச் சட்டத்தின் கீழ் உள்துறை அமைச்சகம் இந்த ஏழு நூல்களைத் தடை செய்துள்ளது.
இந்த தடை உத்தரவு ஏப்ரல் 15 மற்றும் 17-ஆம் தேதியில் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘Tuan Ziyad: Forbidden Love’, ‘Kougar 2’ என்ற இரு நூல்களும் ஒழுக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்திற்காக தடை செய்யப்பட்டன.
தடை உத்தரவை மீறி இந்த நூல் விற்பனை செய்யப்பட்டால் RM5,000 வரை அபராதம், விநியோகம் தொடர்பான குற்றங்களுக்கு RM20,000 வரை அபராதம் மற்றும் அல்லது மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 2, 2025, 5:04 pm
அன்னையர்களின் தியாகங்களுக்கு உரிய அங்கீகாரத்தை செய்வோம்: பிரபாகரன்
June 2, 2025, 1:17 pm