நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவில் இந்திய உணவகங்களில் தனித்துவத்தை நிலைநிறுத்தும் இந்தியா கேட்

புக்கிட் ஜாலில்: 

மலேசியாவின் இந்திய உணவக வர்த்தகத்தில் தனித்துவம் வாய்ந்த இடத்தைப் பெற்றுள்ள இந்தியா கேட் நிறுவனம், தனது 11ஆவது கிளை உணவகத்தை புக்கிட் ஜாலில் பெவ்லியன் பேரங்காடியில் விமரிசையாகத் தொடங்கியுள்ளது.

இந்தியா முழுமையுமான உணவுச் சுவைகளை ஒரே இடத்தில் அனுபவிக்கக்கடிய இடமாக இந்தியா கேட் தன்னை நிரூபித்துள்ளது. 

புதிய இலக்கு

“பொதுவாக இவ்வளவு பெரிய அளவிலான பேரங்காடியில் இந்திய உணவகத்தை நிறுவுவது கடினம். ஆனால், அதை முறியடித்து நாங்கள் இந்த புதிய கிளையைத் தொடங்கியுள்ளோம்,” என இந்தியா கேட் நிறுவன உரிமையாளர் சரவணன் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

மலேசியாவின் முக்கிய வர்த்தகக் கூடங்களுள் ஒன்றான பெவ்லியன் புக்கிட் ஜாலில் பேரங்காடியில் இது முதலாவது இந்தியா கேட் கிளையாகும். 

இவ்விடத்திற்கு பெரும்பாலானோர் உயர்தர உணவுப் பார்வையுடன் வருவோர் என்பதால், இந்தியா கேட் உணவகத்தின் தரமான சேவை மற்றும் பரிமாற்றம் பெரிதும் வரவேற்கப்படுகிறது.

சீனர். மலாய்க்காரர்கள் பெரும் வரவேற்பு

இந்த புதிய கிளைக்கு சீன மற்றும் மலாய் சமூகத்தினரும் மிகுந்த ஆதரவைத் தந்துள்ளனர். “இங்கு நாங்கள் வழங்கும் ரொட்டி நான் மற்றும் இந்திய பாரம்பரிய உணவுகள் அவர்களுக்கு மகிழ்ச்சியையும், புதுமையையும் ஏற்படுத்தியுள்ளது,” என சரவணன் கூறினார்.

இந்த கிளையில் விலை மற்ற கிளைகளை விட சற்று அதிகமாக இருந்தாலும், அதே தரமான உணவு, சுத்தம் மற்றும் சேவை தரம் என்பவை வாடிக்கையாளர்களின் மனதை வென்று வருகிறது. 

மேலும், இந்த பேரங்காடியில் உள்ள பிற உணவகங்களை ஒப்பிடும் போது, இந்தியா கேட் வழங்கும் விலைவரம்பு குறைவாகவே உள்ளது என்பதையும் சரவணன் சுட்டிக் காட்டினார்.

மலேசியாவின் உணவக வர்த்தகத்தில் இந்தியா கேட் நிறுவனம் தொடர்ந்தும் தனது கிளை உணவகங்களை விரிவுபடுத்தி வருகின்றது. அனைத்து சமூகத்தினரையும் இணைக்கும் உணவுப் பாலமாக அது உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset