நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாணவியை அவமானம் செய்த ஆசிரியர் தொடர்பான காணொலி: கல்வியமைச்சு விசாரணை 

பெட்டாலிங் ஜெயா: 

பள்ளி மாணவி ஒருவரை ஆசிரியர் கோபித்து கொண்டதுடன் சம்பந்தப்பட்ட மாணவியை ஆசிரியர் அவமானப்படுத்தும் சம்பவம் அடங்கிய காணொலி சமூக ஊடகங்களில் வைரலானது. 

காணொலி வைரலானதைத் தொடர்ந்து மலேசிய கல்வியமைச்சு இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது என்று அமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறினார். 

கல்வி இயக்குநர் அஸ்மான் அட்னான் இந்த விவகாரத்தை கையாள அமைச்சர் ஃபட்லினா பணித்துள்ளார். 

காணொலி வைரலானதைத் தொடர்ந்து இது சமூக மக்களிடையே பெரும் தவறாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஃபட்லினா சொன்னார். 

அரசு ஊழியராக பணியைத் தொடங்கும் ஆசிரியர்கள் தங்களின் மாண்பு, நன்னடத்தைகளை முறையாக பேண வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். 

முன்னதாக, பள்ளியின் சிற்றுண்டி சாலையில் மாணவி ஒருவரை ஆசிரியர் அவமானப்படுத்தும் காணொலி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset