
செய்திகள் உலகம்
‘பாலஸ்தீனா்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி கொன்றுவரும் இஸ்ரேல் ராணுவம்’
காஸா:
காஸா போரில் பாலஸ்தீனா்களை இஸ்ரேல் ராணுவம் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி கொடுமைப்படுத்தி கொன்று வருவதாக அந்த நாட்டு வீரா்களும் முன்னாள் கைதிகளும் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் அவா்கள் கூறியதாவது:
காஸாவிலும், ஆக்கிரமிப்பு மேற்குக் கரை பகுதியிலும் சண்டையின்போது பாலஸ்தீனா்களை இஸ்ரேல் ராணுவம் மனிதக் கேடயங்களாக பயன்படுத்திவருகிறது. வீடுகளை சோதனையிடும்போது உள்ளே ஆயுதங்களுடன் யாராவது இருக்கிறாா்களா என்பதைத் தெரிந்துகொள்ள, பாலஸ்தீனா்களுக்கு இஸ்ரேல் ராணுவ சீருடை அணிவித்து, கண்களைக் கட்டி, நெற்றியில் கேமரா பொருத்தி அந்த வீட்டுக்குள் அனுப்புவதை இஸ்ரேல் படையினா் வழக்கமாகக் கொண்டுள்ளனா்.
ஒரு பாலஸ்தீனரை அவ்வாறு பயன்படுத்தி, வீட்டுக்குள் ஆயுதப் போராளிகளோ, கண்ணிவெடிகளோ இல்லை என்பதை உறுதிப்படுத்திய பிறகு, அவரை இன்னொரு இஸ்ரேல் ராணுவப் படைப் பிரிவு மற்றொரு வீட்டை சோதனையிட மீண்டும் மனிதக் கேடயமாகப் பயன்படுத்தி அவர்களை கொடூரமாக கொன்று வருகின்றார்கள்.
இதற்கு ஒப்புக் கொள்வதற்காக பாலஸ்தீனா்களை அடித்து உதைக்கும் இஸ்ரேல் படையினா், மனிதக் கேடயமாக செயல்படாவிட்டால் தாங்களே அவா்களைக் கொன்றுவிடுவதாக மிரட்டுவாா்கள். எனவே, வேறு வழியில்லாமல் பாலஸ்தீனா்கள் மனிதக் கேடயங்களாகச் செல்வாா்கள் என்று இஸ்ரேல் வீரா்களும், ஏற்கெனவே மனிதக் கேடயங்களாக செயல்பட்டவா்களும் கூறினா்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
May 25, 2025, 11:39 am
ஏர் ஆசியா விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி பரபரப்பை ஏற்படுத்திய ஆடவர்
May 24, 2025, 10:56 am
ஜெர்மனியில் கத்திக்குத்துக்கு இலக்கான 17 பேர்: படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
May 24, 2025, 10:50 am
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டினர் படிப்பதற்கான தடை உத்தரவை நீதிமன்றம் நிறுத்தியது
May 24, 2025, 10:43 am