நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

உலகெங்கும் அழைப்புப் பணியில் ஈடுபட்டுள்ள 1300 பேருக்கு சவுதி மன்னரின் விருந்தாளிகளாக ஹஜ் மேற்கொள்ள மன்னர் சல்மான் அழைப்பு

ரியாத்:

இந்த ஆண்டு ஹஜ், உம்ரா புனித யாத்திரை மேற்கொள்ள 100 நாடுகளைச் சேர்ந்த 1,300 யாத்ரீகர்களுக்கு சவூதி அரேபியா மன்னர் சல்மான் அப்துல்  அஜிஸ் சிறப்பு அழைப்பு விடுத்துள்ளார்.

ஹஜ், உம்ரா புனித யாத்திரைக்கான இரண்டு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலர் விருந்தினர் திட்டத்தின் கீழ் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சியை இஸ்லாமிய விவகாரங்கள் தஃவா, வழிகாட்டுதல் அமைச்சு செயல்படுத்துகிறது.

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களிடையே ஆன்மீக, கலாச்சார பிணைப்புகளை வலுப்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாக இருப்பதாக சவூதி அரேபிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இஸ்லாமிய விவகார அமைச்சரும் திட்டத்தின் பொது மேற்பார்வையாளருமான ஷேக் டாக்டர் அப்துல் லத்தீஃப் அல் ஷேக், சிறப்பு விருந்தினர்களுக்கான இந்த தாராளமான உத்தரவுக்கு  மன்னர் சல்மான், பிரதமர் முஹம்மது சல்மான் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset