நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பெண்டகனில் நிருபர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு: அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை 

வாஷிங்டன்: 

அமெரிக்காவின் தற்காப்பு அமைப்பான பெண்டகனில் செய்தி சேகரிக்க செய்யும் நிருபர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தற்காப்பு செயலாளர் PETE HEGSETH கூறினார். 

வெள்ளிக்கிழமை மகஜர் ஒன்று கிடைக்கப்பெற்ற நிலையில் இந்த நடவடிக்கை அமல்படுத்தப்பட்டது என்று அமெரிக்காவின் தற்காப்பு துறை தெரிவித்தது. 

இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் செய்தி சேகரிக்க வரும் செய்தியாளர்கள் முறையான ஆவணங்களை கொண்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் பாதுகாப்பு, மற்றும் தற்காப்பு அம்சங்களை உறுதிப்படுத்த இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக பெண்டகன் ஊடகவியலாளர்கள் சங்கம் தெரிவித்தது.

அதிபர் டிரம்ப் தலைமையில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக பல கெடுபிடிகள் விதிக்கப்படுவதால் அங்குள்ள ஊடகவியலாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset