நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஏர் ஆசியா விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி பரபரப்பை ஏற்படுத்திய ஆடவர்

புக்கெட்:

தாய்லாந்தின் புக்கெட் தீவிலுள்ள அனைத்துலக விமான நிலையத்தில் வெடிகுண்டுப் புரளியால் அமளி துமளி ஏற்பட்டது.

பேங்காக்கிற்குப் புறப்பட்ட ஏர் ஆசியா விமானத்தில் ஆடவர் ஒருவர் பையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக விமான பணியாளர்களிடம் சொல்லியிருக்கிறார்.

அவர் உடனடியாக விமானியிடம் தகவல் அளித்தார்.

விமானத்தை ஓடுபாதையில் செலுத்திய விமானி அதை மீண்டும் முனையத்துக்கு அருகே திருப்பி விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

விமானத்தில் இருந்த 200 பேரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

விமான நிலைய அதிகாரிகளும் ராணுவ அதிகாரிகளும் விமானத்தைச் சுற்றி வளைத்தனர்.

அவர்கள் விமானத்தில் இருந்த பெட்டிகள், சரக்குகள், இருக்கைகள் ஆகியவற்றை விரிவாகச் சோதித்தனர்.

சுமார் 3 மணி நேரச் சோதனைக்குப் பிறகே விமானத்தில் வெடிகுண்டு இல்லை என்று அதிகாரிகள் உறுதிசெய்தனர்.

வெடிகுண்டு இருப்பதாகச் சொன்ன ஆடவர் பின்னர் கைதுசெய்யப்பட்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset