நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

ஹஜ் ஒரு மகத்தான பாக்கியம் - வெள்ளிச் சிந்தனை

ஹஜ் ஒரு மகத்தான பாக்கியம். மலரும் நினைவுகள் மனதில் நிழலாடுகிறது.

முஸ்தலிஃபாவில் இரவு தங்குதல் ஓர் உன்னத அனுபவம்.

அரண்மனை இல்லை.

ஆடம்பரக் கட்டிடங்கள் இல்லை.

விலை உயர்ந்த படுக்கைகள் இல்லை.

போர்வைகள் இல்லை.

ஏழைகளும் பணக்காரர்களும் சமமாக தூங்கும் இரவு அது.

ஹாஜிகள் தரையில் தூங்குவார்கள்.

அவர்களுக்கான போர்வைகள் எல்லாம் வல்ல ஏகன் தன் அடியார்களுக்கு அளித்த அருள் மட்டுமே. 

ஹாஜிகள் தங்கள் தலைகளை அவர்கள் கைகளில் வைத்தவாறு உறங்குவார்கள்.
 
உலகில் வேறெங்கும் பார்க்க முடியாத உன்னத உறக்கம்! அதிக சோர்வு காரணமாக ஆழ்ந்த நித்திரையும் ஏற்படும்.

கற்றுக்கொள்வோருக்கு இதில் பெரும் பாடம் உள்ளது.

மறுமையில் அல்லாஹ்வுக்கு முன் நிற்பது போன்ற தோற்றம். அந்தக் காட்சியை நினைத்தாலே உடல் நடுங்கும்.

அதிகாலை எழுந்து ஜமராத்தில் கல் எறிவதற்காக பொடிக் கற்களை சேகரித்து... 

தொழுகைக்குப் பிறகு மினாவுக்குச் செல்ல உடனடியாகத் தயாராகுதல்...

காணக் கண் கோடி வேண்டும்! அந்தக் காட்சிக்கு இணை எதுவுமே இல்லை!

யா அல்லாஹ்! ஹஜ் செய்ய ஏங்குபவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கும் அந்த பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

- நூஹ் மஹ்ழரி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset