செய்திகள் விளையாட்டு
மென்செஸ்டர் யுனைடெட் அணிக்கு இந்த பருவம் இன்னும் முடிவடையவில்லை: ராயன் கிக்ஸ்
கோலாலம்பூர்:
மென்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணிக்கு இந்த பருவம் இன்னும் முடிவடையவில்லை.
மென்செஸ்டர் யுனைடெட் அணியின் ஜாம்பவான் ராயன் கிக்ஸ் இதனை கூறினார்.
இங்கிலாந்து பிரிமியர் லீக்கில் மென்செஸ்டர் யுனைடெட் அணி மோசமான அடைவு நிலையை பதிவு செய்துள்ளது.
ஆனால் ஐரோப்பா லீக்கில் மென்செஸ்டர் யுனைடெ அணி அற்புதமான செயல்திறனை வெளிப்படுத்தி உள்ளது.
அதன் அடிப்படை மென்செஸ்டர் யுனைடெட் அணிக்கு இந்த சீசன் இன்னும் முடிவடையவில்லை என நான் நம்புகிறேன்.
மென்செஸ்டர் யுனைடெட் அணி இன்னும் தோற்கடிக்கப்படவில்லை.
மேலும் உள்ளூர் அரங்கில் இது ஒரு பெரிய வித்தியாசம் என்று மென்செஸ்டர் யுனைடெட் அணிக்காக 34 கிண்ணங்களை வென்ற கிக்ஸ் கூறினார்.
மென்செஸ்டர் யுனைடெட், செல்சியிடம் 1-0 என்ற தோல்விக்குப்ன்பிறகு இந்த சீசனில் 18ஆவது தோல்வியைச் சந்தித்தது.
இருந்தாலும் இதில் நேர்மறையான விஷயங்களும் உள்ளன. ஆகையால் அவ்வணிக்கு இந்த சீசன் இன்னும் முடிவடையவில்லை.
தலைநகரில் இன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் ராயன் கிக்ஸ் இவ்வாறு கூறினார்.
முன்னதாக வரும் மே 28ஆம் தேதி புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் 2025 மே பேங்க் சேலஞ்ச் கிண்ண கால்பந்து போட்டி நடைபெறவுள்ளது.
இதில் மோதும் மென்செஸ்டர் யுனைடெட், ஆசியான் ஆல் ஸ்டார்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியை விளம்பரப்படுத்த ராயன் கிக்ஸ் கோலாலம்பூருக்கு வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 3, 2026, 9:15 am
ஐபிஎல் 2026: மும்பையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்
May 3, 2026, 8:54 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
May 3, 2026, 8:49 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
May 2, 2026, 10:49 am
உலகக் கிண்ண போட்டி குறித்து விவாதிக்க பிபாவை சந்திக்க ஈரான் விரும்புகிறது
May 2, 2026, 10:48 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லீட்ஸ் யுனைடெட் வெற்றி
May 1, 2026, 10:22 am
அல் நசர் அணிக்கு ஆதரவாக பாரபட்ச சர்ச்சை மேலும் சூடு பிடிக்கிறது
May 1, 2026, 10:21 am
ஐரோப்பா லீக் கிண்ணம்: நோட்டிங்காம் போரஸ் வெற்றி
April 30, 2026, 1:09 pm
மனபலம் தான் வெற்றியைத் தீர்மானிக்கும்: லீ ஜி ஜியா
April 30, 2026, 9:14 am
