நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உணவகம் உட்பட 10 துறைகளுக்கான அந்நியத் தொழிலாளர்களுக்கான விண்ணப்பம் டிசம்பர் 31 வரை திறந்திருக்கும்: டத்தோ சுரேஸ்

கோலாலம்பூர்: 

உணவகம் உட்பட பத்து துறைகளுக்கு வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள விண்ணப்பம் டிசம்பர் 31 ஆம் தேதி வரை திறந்திருக்கும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை பிரிமாஸ்  எனப்படும் மலேசிய இந்தியர் உணவக உரிமையாளர் சங்கம் பெரிதும் வரவேற்கிறது என்று அதன் தலைவர் டத்தோ சுரேஸ் கோவிந்தசாமி தெரிவித்தார்.

மலேசிய இந்திய உணவகங்களில் வேலை செய்ய 7,500 அந்நியத் தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள்.

உள்துறை அமைச்சரின் அறிவிப்பு எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தாலும் அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ளும் வழிமுறைகள் மற்றும் நடைமுறைகள் என்ன என்பது எங்களுக்கு தெரியப்படுத்த வில்லை.

இது தொடர்பாக உள்துறை அமைச்சின் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி இருக்கிறோம்.

இன்னும் இரண்டு வாரங்களில் இது தொடர்பாக நல்ல பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ளவது ஒருபக்கம் இருந்தாலும் Gantian எனப்படும் மாற்றுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள அரசாங்கம் உடனடியாக அனுமதி வழங்கினால் மலேசிய இந்தியர் உணவக உரிமையாளர்கள் எதிர் நோக்கி இருக்கும் சவால்களுக்கு தீர்வு காணலாம் என்றார்.

உணவகங்களில் வேலை செய்யும் அந்நியத் தொழிலாளர்களின் வயது வரம்பு 45 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வயது வரம்பை 60 ஆக உயர்ந்த வேண்டும் என்று அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறோம்.

உணவகங்களில் வேலை செய்யும் 45 வயதுக்கு மேற்பட்ட வர்கள் நன்கு அனுபவம் பெற்றவர்கள்.

இவர்களால் சுவையான உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு சமைத்து கொடுக்க முடியும்.

ஆகவே அனுபவம் வாய்ந்த அந்நியத் தொழிலாளர்களை தொடர்ந்து வேலைகள் அமர்த்திக் கொள்ள அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று டத்தோ சுரேஸ் கோவிந்தசாமி கேட்டுக் கொண்டார்.

இன்று பிரிமாஸ் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிமாஸ் துணை தலைவர் கிருஷ்ணன், உதவித் தலைவர் டாக்டர் சீனு, செயலாளர் சண்முகம், பொருளாளர் விஜயபெருமாள் உட்பட உச்சமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset