நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வங்கியில் முதலீடு செய்த இந்திய முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்: எங்களின் முதலீட்டு தொகையை திருப்பி தாருங்கள் 

ஈப்போ: 

மலேசிய மண்ணில் மிகவும் பிரசித்தி பெற்ற வங்கி ஒன்றில் முதலீடு செய்த சுமார் 162 இந்திய முதலீட்டாளர்களுக்கு வங்கி எந்த ஈவும் தராததால் ஏமாற்றத்திற்குள்ளான முதலீட்டாளர்கள் குறிப்பிட்ட வங்கியை அணுகி விளக்கம் கேட்டனர். 

முதலில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்த பணத்தை தந்து விடுவதாக கூறிய வங்கி அதிகாரிகள் காலப்போக்கில் முதலீடு செய்த தொகையை தர முடியாது என்று கூறியதால் சம்பந்தப்பட்ட வங்கி மீது வழக்கு ஒன்று பதிவு செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர் மரியம் சிகாமணி கூறினார்.

வங்கி அதிகாரியாக முதலீட்டாளர்களை சேர்த்த இந்திய அதிகாரியின் மோசடி செயல்நடவடிக்கைகளை அறிந்த போலீஸ் தரப்பினர் அவரை பிடித்து நீதிமன்றத்தில் நிறுத்தி, தற்போது சிறை கைதியாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

நாங்கள் சம்பந்தப்பட்ட வங்கியை நம்பித்தான் முதலீடு செய்தோம். ஆனால், தற்போது முதலீட்டாளர்களான எங்களை புறக்கணிப்பு செய்வது ஏற்புடையதல்ல என்று அவர் சொன்னார்.

எங்களில் ஒரு சிலரின் முதலீட்டை வங்கி வழங்கி விட்டது. ஆனால், பெரும்பாலானவர்களின் முதலீட்டு தொகையை வங்கி இன்னமும் வழங்கவில்லை. ஆகையால் எங்களின் முதலீட்டை எங்களிடமே வழங்கி விடும்படி அவர் கோரிக்கை மனு தந்துள்ளார்.

எங்கள் பிள்ளைகளின் கல்விக்கு நிதி தேவைப்படுவதால் இந்த வங்கியில் முதலீடு செய்தோம். ஆனால், ஒரு வங்கி கிளை நிறுவனமே இந்த பணமோசடி விவகாரத்தில் ஈடுபட்டுள்ளதாக காலப்போக்கில் அறிய முடிந்தது என்று அவர் வருத்தமாக கூறினார்.

எங்களுக்கு நீதி வேண்டும்; அதற்குதான் வழக்கு பதிவு செய்துள்ளோம். எங்களை போன்று மற்ற இந்திய சமூகத்தினரும் வங்கிகளில் ஏமாற வேண்டாம் என்று அவர் அறிவுறுத்தினார்.

- ஆர். பாலச்சந்தர் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset