நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிஜேஎஸ்-1 தமிழ்ப் பள்ளிக்கு ஸ்மார்ட்போர்டை அன்பளிப்பு செய்தார்  டத்தோ மோகன்

பெட்டாலிங் ஜெயா:

பெட்டாலிங் உத்தாமா மாவட்டத்தில் இடம் பெற்றுள்ள பிஜேஎஸ்- I தமிழ்ப்பள்ளிக்கு டத்தோ டி. மோகன் ஸ்மார்ட்போர்டு அன்பளிப்பு செய்தார்.

பிஜேஎஸ்- 1 தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியர்  ராஜ லெட்சுமி ராஜரத்தினம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்ட டத்தோ டி.மோகன் இந்த ஸ்மார்ட் போர்ட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

பிஜேஎஸ் 1 தமிழ்ப் பள்ளியில் தற்போது பாலர்பள்ளி மாணவர்கள் உட்பட 225 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். மேலும் இந்த பள்ளியில் 22 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் காலத்தில் நாட்டில் 7 புதிய தமிழ்ப் பள்ளிகள் கட்டப்பட்டது. அதில் ஒரு தமிழ்ப் பள்ளி பிஜேஎஸ் 1 தமிழ்ப் பள்ளியும் ஒன்றாகும்.

நான்கு மாடி கட்டடங்களுடன் மிகவும் நவீன வசதிகளுடன் இந்த தமிழ்ப் பள்ளி காட்சி அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset