
செய்திகள் மலேசியா
அந்நியத் தொழிலாளர்களுக்கான வயது வரம்பை அதிகரிக்க வேண்டும்: பிரஸ்மா தலைவர் டத்தோ ஜவஹர் அலி வேண்டுகோள்
கோலாலம்பூர்:
வெளி நாடுகளில் இருந்து தொழிலாளர்களை தருவிக்க அனுமதி வழங்கி இருக்கும் ஒற்றுமை அரசாங்கத்திற்கு நன்றி கூறிக் கொள்கிறோம். அதே சமயத்தில் எங்களின் பல கோரிக்கைகளை அரசாங்கம் கவனத்தில் எடுத்துக் கொண்டு அதற்கு தீர்வு காண வேண்டும் என்று பிரஸ்மா எனப்படும் மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர் சங்கத் தலைவர் டத்தோ ஹாஜி ஜவஹர் அலி கேட்டுக் கொண்டார்.
நாட்டில் இந்திய முஸ்லிம் உணவகங்களில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து தொழிலாளர்களை தருவிக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறோம். குறைந்த பட்சம் 25 ஆயிரம் தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர் என்று நாங்கள் கூறியிருந்தோம்.
எங்களின் இந்த கோரிக்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. புதிதாக மேலும் அதிகமான தொழிலாளர்களை தருவிக்க அது வாய்ப்பு வழங்கி இருக்கிறது. இதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கும் ஒற்றுமை அரசாங்கத்திற்கும் நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால் அதனுடன் எங்களின் இரண்டு கோரிக்கைகளை கவனத்தில் கொள்ளும்படி இப்போது கேட்டுக் கொள்கிறோம்.
வெளிநாடுகளில் இருந்து தருவிக்கப்படும் தொழிலாளர்கள் 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பது இப்போதைய நடைமுறை. ஆனால் இந்த வயது வரம்பை 60ஆக அதிகரிக்க வேண்டும். 60 வயதை அடைந்த தொழிலாளர்கள் நீண்ட அனுபவம் பெற்றவர்கள். அவர்களை வேலைக்கு அமர்த்துவதன் மூலம் தொழிலாளர் பற்றாக்குறைக்கு தீர்வு காண முடியும்.
பணியில் இருக்கும் ஒரு அந்நியத் தொழிலாளி சொந்த ஊருக்கு திரும்புகின்ற போது அவருக்கு மாற்றாக (GANTIAN) இன்னொரு தொழிலாளியை கொண்டு வர அனுமதிக்க வேண்டும். இதற்கு முன்னர் இந்த திட்டம் (GANTIAN) அமலாக்கத்தில் இருந்தது. கடந்த 10 ஆண்டுகளாக இப்படி மாற்று தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை.
ஆகையால் இந்நிலை மாறி இத்திட்டம் மீண்டும் அமலாக்கத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முஸ்லிம் உணவக உரிமையாளர் சங்கம் முன் வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதே சமயத்தில் 10 ஆண்டுகள் மட்டுமே வேலை செய்ய முடியும் என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும். அவர்கள் ஆரோக்கியமாக இருக்கும்பட்சத்தில் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் வேலை செய்ய அனுமதிக்க வேண்டும்.
உணவகங்களில் வேலை செய்யும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான வரி முறையாக செலுத்தப்படுகிறது என்பதை அரசாங்கம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆகவே நாங்கள் முன் வைத்திருக்கும் இந்த கோரிக்கைகளை அரசாங்கம் பரிசீலனை செய்து நல்லதொரு முடிவை அறிவிக்க வேண்டும் என்றும் டத்தோ ஹாஜி ஜவஹர் அலி கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 23, 2025, 12:03 pm
மடானி பட்டதாரி திட்டத்தை. எச்ஆர்டி கோர்ப் அறிமுகப்படுத்துகிறது: டாக்டர் சைட் அல்வி
August 23, 2025, 11:51 am
மலேசியாவிற்கு JPMorganChase RM1.4 பில்லியன் செலுத்த உள்ளது
August 23, 2025, 10:54 am
KTMB இன் ETS3 சேவையை பேரரசர் துவக்கி வைத்து குளுவாங்கிற்கு ரயிலை செலுத்துகிறார்
August 22, 2025, 7:11 pm