
செய்திகள் மலேசியா
பினாங்கு உணவகங்களில் எலி எச்சங்கள்: MBPP மூன்று உணவகங்களை மூடியது
ஜார்ஜ் டவுன்:
உணவு சேமிப்புப் பகுதியிலும் உறைந்த உணவுப் பிரிவிலும், சமையலறையிலும் எலி எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் மூன்று உணவகங்களை மூட பினாங்கு நகர சபை (MBPP) உத்தரவிட்டுள்ளது. சுகாதார நிலை திருப்தியற்றதாக இருந்ததால் ஒருங்கிணைந்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவில் திடீர் என்று ஆய்வு செய்யப்பட்ட மூன்று வளாகங்களும் நேற்று முதல் செப்டம்பர் 3 வரை 14 நாட்களுக்கு உடனடியாக மூடப்படும் என்று MBPP தெரிவித்துள்ளது.
செல்லுபடியாகும் வணிக உரிமங்கள், வளாகத்தின் தூய்மை, உணவு கையாளுபவர் விதிமுறைகளை கடைபிடிப்பது உள்ளிட்ட பல செயல்பாடுகளை சோதித்த MBPPயும் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகமும் (KPDN) இடையே ஒரு கூட்டு முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆய்வின் போது தடுப்பூசி அட்டைகள் அல்லது டைபாய்டு எதிர்ப்பு ஊசிகளைப் பெறவோ அல்லது வழங்கவோ தவறியதற்காக MPPP 1983 உணவு கையாளுபவர்கள் துணைச் சட்டங்களின் துணைச் சட்டம் 12(1) இன் கீழ் மொத்தம் 14 சம்மன்கள் வழங்கப்பட்டன. அந்த குறிப்பிட்ட உணவகங்கள் தூய்மையை கடைப்பிடிக்காமல் இருந்தன என்று கூறப்பட்டது.
சுகாதாரக் கேடுகளை உண்டாக்கும் அசுத்தமான உணவகங்களுக்கு எதிராக பினாங்கு நகரசபை கடும் நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரித்துள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 23, 2025, 12:03 pm
மடானி பட்டதாரி திட்டத்தை. எச்ஆர்டி கோர்ப் அறிமுகப்படுத்துகிறது: டாக்டர் சைட் அல்வி
August 23, 2025, 11:51 am
மலேசியாவிற்கு JPMorganChase RM1.4 பில்லியன் செலுத்த உள்ளது
August 23, 2025, 10:54 am
KTMB இன் ETS3 சேவையை பேரரசர் துவக்கி வைத்து குளுவாங்கிற்கு ரயிலை செலுத்துகிறார்
August 22, 2025, 6:57 pm