நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மிசியின் செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் புகைப்படம், வீடியோ எடுத்தல், எடிட்டிங் பயிற்சி: இந்திய இளைஞர்கள் பயன் பெற்றனர்

மாசாய்:

மிசியின் செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் புகைப்படம், வீடியோ எடுத்தல், எடிட்டிங் பயிற்சியில் இந்திய இளைஞர்கள்  கலந்து பயன் பெற்றனர்.

படைப்பாற்றல், தொழில்நுட்பம் மூலம் திறமையை மேம்படுத்துவது மிசியின் முதன்மை இலக்காக உள்ளது.

இதன் அடிப்படையில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான புகைப்படம், வீடியோ எடுத்தல், எடிட்டிங் பயிற்சி கொகூர் மாசாயில் நடைபெற்றது.

மலேசிய இந்திய சமூகத்தினரிடையே படைப்புத் திறனையும் இலக்கவியல் கல்வியறிவையும் மேம்படுத்துவதற்காக இப்பயிற்சி திட்டம்பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது.

இந்த திட்டத்த்தில் மொத்தம் 25 இந்திய இளைஞர்கள் கலந்து பயன் பெற்றனர்.

இந்திய இளைஞர்களின் திறமைகளை எதிர்கால திறன்களுடன் மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின்  உறுதிப்பாட்டை இப்பயிற்சி மேலும் வலுப்படுத்துகிறது.

இந்த ஐந்து நாள் நிகழ்ச்சி மூன்று முக்கிய கூறுகளில் கவனம் செலுத்தப்பட்டது.

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான புகைப்படம் எடுத்தல்,  செயற்கை நுண்ணறிவு வாயிலாக வீடியோ எடிட்டிங், ஆக்கப்பூர்வமான வருமான உருவாக்கம், வணிக மேம்பாடு ஆகியவை அந்த மூன்று முக்கிய கூறுகளாகும்.

வேகமாக வளர்ந்து வரும் இயக்கவியல் படைப்புத் துறையில் வாய்ப்புகளை ஆராய்வதுடன், தங்கள் திறமைகளை தொடர்ந்து மேம்படுத்துவதற்கான ஊக்கமாக பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

மனிதவள அமைச்சு கீழ் இயங்கும் எச்ஆர்டி கோர்ப் இப்பயிற்சியை ஏற்பாடு செய்திருந்தது.

மேலும் இப்பயிற்சி மனிதவள அமைச்சர்  ஸ்டீவன் சிம்மின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப உள்ளது.

அவரது தலைமை மலேசியாவை திறன்களை அடிப்படையாகக் கொண்ட எதிர்காலத்தை நோக்கி நகர்த்தி வருகிறது.

இது போன்ற முயற்சிகள் கல்வி, புதுமை, இலக்கவியல் உள்ளடக்கம் மூலம் சமூகத்தை மேம்படுத்துவதற்கான அவரது உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset