
செய்திகள் மலேசியா
அன்பு இல்ல பிள்ளைகளுக்காக ‘டூரீஸ் ஃபேமிலி’ சிறப்பு காட்சி: டத்தோ பத்மநாபன் முழு ஆதரவு!
கோலாலம்பூர், மே 15:
அன்பு இல்லங்களில் வாழும் 150க்கும் மேற்பட்ட ஆதரவற்ற பிள்ளைகள், குடும்ப உறவுகளின் நெகிழ்ச்சியையும் அர்ப்பணிப்பையும் பதிவு செய்துள்ள டூரீஸ் ஃபேமிலி திரைப்படத்தை சிறப்பு திரையரங்கத்தில் மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்தனர்.
இந்தச் சிறப்புக் காட்சிக்கு Thafadal Security Service நிறுவனத்தின் உதவித் தலைவர் டத்தோ பத்மநாபன் தனது முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கினார். “குடும்பத்தின் அன்பும், ஒற்றுமையும் எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்த்தும் இப்படத்தை, ஆதரவற்ற பிள்ளைகளும் அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முயற்சிக்கு இணக்கம் தெரிவித்தேன்,” என அவர் கூறினார்.
இந்நிகழ்வை ஒருங்கிணைத்த ஏற்பாட்டாளர்களுக்கு நன்றியையும் தெரிவித்த டத்தோ பத்மநாபன், சமூக நலத்துக்கான இத்தகைய முனைப்புகள் தொடர்ந்து ஊக்கமளிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
டூரீஸ் ஃபேமிலி திரைப்படம் உலகளாவிய ரீதியில் வெற்றிகரமாக திரையிடப்பட்டு வருகின்றது. மலேசியா ரசிகர்களிடமும் இது பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சசிகுமார், சிம்ரன், யோகிபாபு, எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Heartwork Pictures நிறுவனம்
இந்த திரைப்படத்தை இந்தியத் திரையுலகில் கடந்த பத்து ஆண்டுகளாக ஈடுபாட்டுடன் பணியாற்றி வரும் யோகிசான் விஜயமோகன் தலைமையிலான Heartwork Pictures நிறுவனம் ஃபை ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து இத்திரைப்படத்தை மலேசியாவில் வெளியிட்டுள்ளது.
இதனிடையே குமரன் ரெங்கசாமி மற்றும் திரிபுரபவன் முனியாண்டியுடன் இணைந்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ் திரைப்பட விநியோகத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தற்போது, ஒரு மலாய் திரைப்படத்தையும் தயாரித்து வருவதாகவும், அது 2026ஆம் ஆண்டில் வெளியீடு காணும் என எதிர்பார்க்கப்படுகின்றது
தயாளன் சண்முகம்
தொடர்புடைய செய்திகள்
May 15, 2025, 2:42 pm
காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் ஆடவர் பலி: பினாங்கு போலீஸ் தகவல்
May 15, 2025, 12:40 pm