
செய்திகள் மலேசியா
மாமனிதர்களை உருவாக்கும் ஆசிரியர்கள் பணி மகத்தானது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் ஆசிரியர் தின வாழ்த்து
கோலாலம்பூர்:
மாணவர்களின் கல்வி சீர்திருத்தத்திற்கு ஆசிரியர்கள் ஒரு வாகனமாக செயல்பட்டு
மாமனிதர்களை உருவாக்கும்
ஆசிரியர்கள் பணி மகத்தானது.
மஇகா தேசிய தலைவர்
டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தமது ஆசிரியர் தின வாழ்த்து செய்தியில் இதனை குறிப்பிட்டார்.
அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இளம் தலைமுறையை ஊக்குவித்து சிறந்த தேசத்தை ஆசிரியர்களே கட்டமைக்கின்றனர்.
இந்த நாளில் மட்டுமன்றி எல்லா நாளும் நாம் அனைவரும் ஆசிரியர்களுக்கு மரியாதையும், நன்றியும் செலுத்த வேண்டும்.
ஆசிரியர்கள் செய்துவரும் சேவை மகத்தானது. மேலும் ஆசிரியப் பணி என்பது மாமனிதர்களை உருவாக்கும் மகத்தான பணியாகும்.
மாணவர்கள் தங்கு தடையின்றி தரமான கல்வியை பெறுவதற்கு ஆசிரியர்கள் தங்களது கடமையை முறையாக செய்து வருகின்றனர்.
ஆசிரியர்கள் அவ்வப்போது நிகழும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை மேம்படுத்திக் கொண்டு மாணவர்களை சிறந்தவர்களாக உருவாக்கும் பணியை திறம்படச் செய்ய வேண்டும்.
Guru Pemacu Reformasi Pendidikan எனும் கருப்பொருளுடன் இவ்வாண்டு ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
கல்வி சீர்திருத்தத்திற்கு ஆசிரியர்கள் ஒரு வாகனமாக இருக்கின்றனர் என்பது இதன் அர்த்தம்.
ஆகையால், இந்நாளில் மட்டுமன்றி எல்லா நாளும் ஆசிரியர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 15, 2025, 3:42 pm
அன்பு இல்ல பிள்ளைகளுக்காக ‘டூரீஸ் ஃபேமிலி’ சிறப்பு காட்சி: டத்தோ பத்மநாபன் முழு ஆதரவு!
May 15, 2025, 2:42 pm
காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் ஆடவர் பலி: பினாங்கு போலீஸ் தகவல்
May 15, 2025, 12:40 pm