
செய்திகள் மலேசியா
குறுகிய காலத்தில் பல்வேறு திட்டங்கள்; இந்திய தொழில் முனைவர்களின் மேம்பாட்டிற்கு டத்தோஸ்ரீ ரமணனின் பங்கு அளப்பரியது: குணராஜ்
செந்தோசா:
இந்திய தொழில் முனைவர்களின் மேம்பாட்டிற்கு தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சத் டத்தோஸ்ரீ ரமணனின் பங்கு அளப்பரியது.
செந்தோசா சட்டமன்ற உறுப்பினரும் சிலாங்கூர் மந்திரி புசாரின் சிறப்பு அதிகாரியுமான குணராஜ் ஜோர்ஜ் இதனை கூறினார்.
மலேசியாவில் உள்ள இந்திய தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்காக அவர் பல சிறந்த முயற்சிகளை மேற்கொணடுள்ளார்.
குறிப்பாக கடந்த மூன்று மாதங்களில், டத்தோஸ்ரீ ரமணன் மொத்தம் 256 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நான்கு முக்கியத் திட்டங்களை அறிவித்துள்ளார்.
இது மடானி மலேசியா கொள்கைக்கு ஏற்ப பொருளாதார வளர்ச்சிக்கான அவரின் முன்னோடி அணுகுமுறையை நிரூபிக்கிறது.
தெக்குன், தெக்குன் கோஸ் பிக் திட்டத்தின் கீழ் 2024–2025 ஆம் ஆண்டுக்கு 160 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக 3,056 இந்திய தொழில்முனைவர்கள் பயன் பெற்றுள்ளனர்.
எஸ்எம்இ பேங்க்கின் வணிகம் திட்டத்தின் கீழ் 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது இந்த ஆண்டுக்குள் 250 இந்திய தொழில்முனைவோரை இலக்காகக் கொண்டது.
பேங்க் ரக்யாட்டின் பிரிவ்-ஐ திட்டத்தின் கீழ் 2024–2025ஆம் ஆண்டுக்கு 150 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக இந்திய தொழில்முனைவோருக்குச் சொந்தமான 541 நிறுவனங்களுக்கு உதவி வழங்கப்பட்டுள்ளது.
எஸ்எம்இ கோர்ப்பின் ஐ-பேப் திட்டத்தின் கீழ் 6 மில்லியன் ரிங்கிட் மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டங்கள் வெறும் கடனுதவி, நிதியுதவி மட்டுமல்ல.
மலேசியாவில் இந்திய தொழில்முனைவோருக்கு மிகவும் நியாயமான, வளமான எதிர்காலத்தை நோக்கிய ஒரு படிக்கல்லாகும்.
மேலும் டத்தோஸ்ரீ ரமணனின் தொலைநோக்குப் பார்வை, மக்களை மையமாகக் கொண்ட தலைமையின் விளைவாக ஏற்பட்ட உறுதியான சாதனைகளைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
கடந்த 2023ஆம் ஆண்டில் அவர் மித்ரா சிறப்பு நடவடிக்கை குழுக் தலைவராக வழிநடத்தியபோது சிறந்த சாதனையின் அடிப்படையில், இந்திய சமூகத்தை வழிநடத்த டத்தோஸ்ரீ ரமணன் தகுதி பெற்றுள்ளார்.
அதன் அடிப்படையில் கெஅடிலான் கடைப்பிடிக்கும் அனைவரையும் உள்ளடக்கிய கொள்கைகளுக்கு இணங்க,
இந்திய சமூகத்தின் குரலைப் பிரதிநிதித்துவப்படுத்த அடுத்த வாரம் நடைபெறும் கட்சித் தேர்தலில் கெஅடிலான் உதவித் தலைவர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அவர் தகுதியானவர்.
கெஅடிலான் உதவித் தலைவராக டத்தோஸ்ரீ ரமணன் வெற்றி பெறுவதற்கு என்னுடைய முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குணராஜ் கூறினார்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 15, 2025, 3:42 pm
அன்பு இல்ல பிள்ளைகளுக்காக ‘டூரீஸ் ஃபேமிலி’ சிறப்பு காட்சி: டத்தோ பத்மநாபன் முழு ஆதரவு!
May 15, 2025, 2:42 pm
காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் ஆடவர் பலி: பினாங்கு போலீஸ் தகவல்
May 15, 2025, 12:40 pm