நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

691 பேருக்கு தொடர்பு அமைச்சின் சிறந்த சேவை விருது: கவிராஜன், ஜமுனா பல இந்தியர்கள் அங்கீகாரம் பெற்றனர்

கோலாலம்பூர், 

தொடர்பு அமைச்சின் 2024ஆம் ஆண்டுக்கான Anugerah Perkhidmatan Cemerlang (APC) விருதை, மொத்தம் 691 ஊழியர்கள் பெற்றுள்ளனர். அவர்களில் 63 பேர் தேசிய செய்தி நிறுவனம் Bernama-வைச் சேர்ந்தவர்கள்.

அந்த 63 Bernama ஊழியர்களில், மலேசிய ஊடகத் துறையில் நீண்ட காலமாக பணியாற்றும் கவிராஜன் ஜெகராஜன் மற்றும் ஜமுனா வேலாயுதம் ஆகியோரும்  APC விருதைப் பெற்றனர். விருது பெற்ற அனைவருக்கும் சான்றிதழும் RM1,000 மதிப்பிலான ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.

பயணம் தொடங்கிய இடம்: ஜமூனா வேலாயுதம்

“என் ஊடகப் பயணம் RTM-இல் தொடங்கியது. இன்று அந்த துறையிலேயே அரசாங்க அங்கீகாரம் கிடைப்பது எனக்கே bukan sahaja penghormatan – ஒரு உணர்வுப்பூர்வ தருணமாகும்,” என ஜமுனா வேலாயுதம் குறிப்பிட்டார்.

வேலை அல்ல சேவை: கவிராஜன் ஜெகராஜன்

“ஊடகத் துறையில் 20 ஆண்டுகள் சேவை புரிந்திருக்கிறேன். இது ஒரு வேலை அல்ல – ஒரு சேவை. அந்த சேவைக்கு கிடைத்த மிகப் பெரிய அரசு அங்கீகாரம், இதனை என் குடும்பத்துக்கே அர்ப்பணிக்க விரும்புகிறேன்.” என கவிராஜன் தெரிவித்தார்.

முன்னதாக 2023ஆம் ஆண்டு நம்பிக்கை குழுமத்தின் நம்பிக்கை நட்சத்திர விருதுகளில் சிறந்த செய்தி வாசிப்பாளர் விருதை ஜமுனா வேலாயுதம் வென்றார். சிறந்த செய்தியாளர் விருது கவிராஜன் ஜெகராஜனுக்கு வழங்கப்பட்டது.

இந்த APC விருது விழாவினை தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்ஸில் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்ததோடு அனைவருக்கும் சான்றிதழ்களையும் ஊக்கத்தொகையும் வழங்கினார்.

உழைப்பிற்கு அங்கீகாரம்

இதனிடயே ஆர்டிஎம்மின் ஆர்டிஎமில் நிகழ்ச்சி தரக்கட்டுப்பாட்டு பிரிவு பிரிவைச் சேந்த ஷாமளா தேவி, ஆர்டிஎம் தொலைக்காட்சி தமிழ்ச் செய்தி பிரிவைச் சேர்ந்த சூரியா சம்பத், வானொலி தமிழ்ச் செய்தி பிரிவைச் சேர்ந்த சிவசங்கரி கணபதி, மின்னல் பண்பலையை சேர்ந்த பவானி பழனியப்பன், பேரா ஆர்டிஎம்மைச் சேர்ந்த கவிதா கன்னியம்மன்,  ஆகியோருக்கும் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset