
செய்திகள் மலேசியா
காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் ஆடவர் பலி: பினாங்கு போலீஸ் தகவல்
ஜார்ஜ்டவுன்:
இன்று அதிகாலையில் போலீசார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஆடவர் ஒருவர் பலியானார். இந்த சம்பவம் பினாங்கு மாநிலத்தின் பாயான் லெபாஸ் பகுதியில் நிகழ்ந்தது.
பலியான 35 வயதான ஆடவன் இதற்கு முன் 34 குற்றப்பின்னணிகளைக் கொண்டுள்ளான் என்றும் இன்று நடந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் காலை 4.03 மணிக்கு உயிரிழந்ததாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் ஹம்சா அஹ்மத் உறுதிப்படுத்தினார்.
BMW காரை செலுத்தி வந்த ஆடவன் சந்தேகத்திற்குரிய வகையில் நடந்து கொண்டதாகவும் காரை விட்டு இறங்கி காவல்துறை அதிகாரிகளை நோக்கி துப்பாக்கி சுட்டதாகவும் அவர் சொன்னார்.
தற்காப்புக்காக போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது. 22.5 கிரேம் மெத்தாம்பெத்தாமின் வகை போதை பொருட்களும் கண்டுப்பிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 15, 2025, 3:42 pm
அன்பு இல்ல பிள்ளைகளுக்காக ‘டூரீஸ் ஃபேமிலி’ சிறப்பு காட்சி: டத்தோ பத்மநாபன் முழு ஆதரவு!
May 15, 2025, 12:40 pm