
செய்திகள் கலைகள்
கம்பீரக் குரல் ஓய்ந்தது : வானொலி புகழ் வைரக்கண்ணு மறைவு
பெட்டாலிங் ஜெயா:
மலேசியா வானொலி துறையில் நீண்ட காலமாகத் திகில், மர்மம், உணர்ச்சி நிறைந்த நாடகங்களை உருவாக்கி, மலேசிய மக்களின் உள்ளங்களைக் கவர்ந்த வைரக்கண்ணு இன்று காலமானார்.
இந்தச் செய்தி வானொலி ரசிகர்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனித்துவமான குரல், அசாத்திய கற்பனை திறன், மனதைக் கொள்ளை கொள்ளும் கதை சொல்லல் என அனைத்தையும் ஒரே நேரத்தில் கொண்டு வந்தவர் வைரக்கண்ணு.
குறிப்பாக, 90-ஆம் 2 ஆயிரத்தாம் ஆண்டுகளில் அவரின் நாடகங்கள் ஒலிபரப்பானது என்றால் அந்த நேரத்தில் மக்கள் அனைத்தையும் விட்டு வானொலி பக்கம் திரும்பி நின்றனர்.
அவரது குரல் சப்தமிட்ட உடனே கதையின் திகில் நேரடியாகக் காதுகளில் பாயும்
மலேசியக் கலைத்துறையில் வைரக்கண்ணு ஓர் அடையாளமாக வலம் வந்தார். அவரது எழுத்துக்கள், தயாரிப்புகள், குரல் என்று பன்முகக் கலைஞராக விளங்கினார்.
பல தலைமுறைகளுக்கு வானொலி நாடக கலையை புதிய பாணியில் அறிமுகப்படுத்திய வாழ்ந்த நாயகன்.
அவரது பணிகள் மலேசிய தமிழ் வானொலியின் பொக்கிஷமாகவே தொடர்ந்து பாராட்டப்படும்.
அவர் இல்லாத வெற்றிடத்தை எவராலும் எளிதில் நிரப்ப இயலாது என்பதே உண்மை.
அவரின் குடும்பத்தாருக்கு நம்பிக்கை குழுமம் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றது.
- தயாளன் சண்முகம்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2025, 3:20 pm
பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி காலமானார்
May 5, 2025, 10:29 am
வெளிநாட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்கு 100% வரி: டிரம்ப் அடுத்த அதிரடி
April 28, 2025, 11:05 pm
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் பத்ம பூஷண் விருது பெற்றார் நடிகர் அஜித் குமார்
April 27, 2025, 12:21 pm
‘பயங்கரவாதத்துக்கு மதம் இல்லை’: இன்ஃப்ளூயன்சர் தான்யா கருத்து
April 25, 2025, 5:40 pm
மலேசியக் கலைஞரும் பாடகருமான சிவக்குமார் ஜெயபாலன் இன்று காலமானார்
April 25, 2025, 12:06 pm
நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம்: மலேசியாவில் DMY CREATIONS வெளியிடுகிறது
April 23, 2025, 3:19 pm